தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்க காரணம் இவர் தான்… BCCI உள்ளே நடப்பதை போட்டுடைத்த ஜெய்ஷா…

0
Follow on Google News

டி20 உலகக் கோப்பை 2024 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 3வது வீரராக களமிறங்க விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷாந்த் கிஷன், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்ராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பௌலர் டி நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். குறிப்பாக, டெத் ஓவர்களில், சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தி வருகிறார்.

ஆனால், இவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் தமிழக வீரர் நடராஜன் புறக்கணிப்பின் பின்னணி யார் என்கிற குழப்பத்திற்கு விடை கிடைக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்திய பேச்சு அமைத்துள்ளது. இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஏன் இந்தியா அணியில் இடம்பெறவில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் பேசிய ஜெய்ஷா.

இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை அதனால் ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர்கள் இருவரையும் நீக்கப்பட்டுள்ளார், ஆனால் அவர்களை நீக்கியது நான் இல்லை என தெரிவித்த ஜெய்ஷா, அவர்களை நீக்கியது தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் முடிவு தான் அது.. அதனை செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலையாக இருந்தது என தெரிவித்தவர்.

மேலும், அதே வேளையில் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் சில வீரர்களையும் எங்களால் தவிர்க்க முடியாது. அந்த வகையில் தான் பல இளம் வீரர்களுக்கு புதிதாக ஒப்பந்தமும் வழங்கப்பட்டது. மேலும் எப்போதுமே வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடுவதை பிசிசிஐ கருத்தில் கொண்டு வருகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பும் வழங்கப்படும் என ஜெய் ஷா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியில் யார் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கிடையாது, தேர்வு குழு தலைவராக இருக்க கூடிய அஜித் அகார்கர் தான், அந்த வகையில் அஜித் அகார்கர் தேர்வு செய்யும் முடிவை செய்லபடுத்துவது மட்டுமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வேலையாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்தியா அணியில் நடராஜன் இடம்பெறாமல் போனதற்கு முக்கிய காரணம் தேர்வு குழு தலைவர் அகார்கர் தான் என ஜெய்ஷா பேச்சின் மூலம் தெரிய வருகிறது அனா பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணியில் திறமைக்கு முக்கியதுவம் கொடுக்க கூடிய, குறிப்பாக சிறந்த வீரர்களை தேர்வு செய்ய கூடிய ஒருவர், ஒரு காலத்தில் சிறந்த வீரராக இருந்திருக்க வேண்டும், ஆனால் இந்திய அணியில் என்ன சாதித்து விட்டார் அகார்கர் என அவரை தேர்வு குழு தலைவராக பிசிசிஐ தேர்வு செய்தது,இப்படி ஒருவர் எப்படி திறமையான வீரர் யார் என்று கண்டறிந்து தேர்வு செய்வார்.? அந்த வகையில் தேர்வு குழு தலைவர் தேர்வே தவறானது என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.