2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக சர்வதேச t20 உலக கோப்பை நடைபெறுகிறது. இந்த தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், ஃபுளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை யாவும் தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களும், ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. இந்திய அணி தரப்பில், எல்லாமே தற்காலிக ஏற்பாடு தான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது. அனைத்துமே சராசரியாக செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நியூயார்க் மைதானத்தில் சுமார் 34,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய, இந்த மைதானத்தில் மொத்தம் எட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய இந்தியா, பாகிஸ்தான் போட்டியும் நடைபெறுகிறது. மேலும் டிராப் இன் வகை செயற்கை ஆடுகளத்தை, இந்த கிரிக்கெட் மைதானத்தில் அமைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் புற்களும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. டி20 போட்டிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் தற்காலிக இருக்கை வசதியும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆடுகளமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரையிறுதிப் போட்டிகளில் டிரினிடாட்டில் உள்ள பிரையன் மைதானத்தில் ஒரு போட்டியும் மற்றொன்று கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்திலும் நடைபெறும். இறுதிப்போட்டி பார்படாஸ், பிரிட்ஜ் டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை இங்கு வீரர்கள் யாரும் விளையாடதால் சற்று பீதியில் உள்ளாராம்.
மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 2 நாட்களில் நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், ஃபுளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை யாவும் தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் சில இடங்களில் புயல் வீசிய நிலையில் சில மைதானங்கள் சேதம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மைதானத்தின் எல் இ டி ஸ்க்ரீன்களும் சேதமாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக மைதானங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகாரளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.