விராட் கோலிக்கு இருக்கும் மரியாதை புர்மாவுக்கு இல்லை… இந்திய அணியில் என்ன தான் நடக்கிறது… சீனியர்’ இந்தியன் பிளேயர் வேதனை…

0
Follow on Google News

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியானது இருநாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும் போட்டியாக இருக்கும். இரு நாடுகளுக்கிடையேயான அரசாங்கத்தின் உறவானது, எதிர்மறை போக்குடன் இருந்து வருவதால், இரு நாடுகளுக்கிடையேயான தொடர் போட்டியானது நடைபெறுவதில்லை. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் இல்லாத நிலையில், அவர்கள் ஐசிசி நிகழ்வுகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.

இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் T20 உலகக் கோப்பை 2024 நடைபெற்று வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது.

ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்தியாவுக்கும் இதே நிலைமைதான். இந்திய அணியில் இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஒரு சமயத்தில் போட்டி பாகிஸ்தானின் கைவசம் இருப்பதுபோல தோன்றியது. ஆனால் போட்டியின் திசையை திருப்பி இந்தியா வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்தப்போட்டியில் இந்தியா 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தானால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது.

கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம், அது `ஜஸ்பிரித் பும்ரா’. பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாதை அமைத்து கொடுத்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் `டாட் பால்கள்’ ஆனது. குறைந்த ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில், இந்த டாட் பால்களின் மதிப்பு விக்கெட் எடுப்பதற்கு சமம் என்றே சொல்ல வேண்டும். தற்போது, இதனை சுட்டி காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஈஎஸ்பிஎன் இன்ஃபோ பத்திரிக்கைக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் பேசி இருப்பார். அவர் கூறுகையில், “விராட் கோலி மற்றும் சில வீரர்களைப் பற்றி மட்டுமே இந்திய ஊடகங்கள் பேசி வருகின்றன. ஆனால் சத்தமே இல்லாம தனியாக வெற்றிகளைப் பெற்று தருகிறார் பும்ரா. சந்தேகமே இல்லாமல் இப்போதைய இந்திய அணியில் பும்ராதான் சிறந்த வீரர்

ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக சிவம் துபேவை அணியில் எடுத்திருக்கிறீர்கள் ஆனால் அவர் அயர்லாந்து அணியுடனான போட்டியில் பந்து வீசவில்லை. அவர் பந்து வீசப் போவதில்லை என்றால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கலாமே. சஞ்சு சாம்சன் அவரைவிட சிறப்பான பேட்ஸ்மேனாக விளையாடுவார். அவரை களம் இருக்கலாம், சஞ்சு சாம்சன் மிகவும் பக்குவத்துடனும் இருக்கிறார் என நான் நம்புகிறேன். மேலும், சஞ்சு சாம்சன் தற்போது சிறந்த ஃபார்மிலும் இருக்கிறார். எனவே, இப்போதே அவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.