புர்மா மட்டும் போதாது… நடராஜன் இல்லை என்றால் இந்தியா மண்ணை தான் கவ்வும்… ஆஸ்திரேலியா வீரர் சொன்ன தகவல்..

0
Follow on Google News

இந்த ஆண்டு t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா, கனடா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உட்பட 20 கிரிக்கெட் அணிகள் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளன. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்முறை இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இம்முறையும் ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா, பும்ரா போன்ற அனுபவம் மிக்க வீரர்களும் சிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் அதிரடியாக இருந்தாலும் பௌலிங் லைன் அப் சற்று பலவீனமாக இருப்பதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்ற டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பகுதிநேர பவுலர்கள் கிடையாது என்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதுகிறார்கள். அதே சமயம், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே போன்ற ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள் என்றாலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர்களின் செயல் திறன் சுமாராகவே இருந்தது. இவை அனைத்தும் இந்திய அணிக்கு பலவீனங்களாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பும்ரா பந்து வீச்சில் அதிரடி காட்டுவார் என்பது ஆறுதல் அளித்தாலும், சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய பவுலர்கள் பும்ராவுக்கு இணையாக செயல்படுவார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இப்படியான நிலையில், ஆஸ்திரேலியா அணியின் பவுலர் மிச்சல் ஸ்டார்க் போல இந்தியா அணிக்கு பும்ரா சிறந்த பவுலராக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். அதே சமயம் பும்ராவுக்கு நிகராக பந்துவீசி அழுத்தத்தை உண்டாக்கப் போவது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மெகராத் பேசுகையில், “நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதியில் ஸ்டார்க் எப்படி கலக்கினார் என்பதை பார்த்தோம். அதேபோல டி20 உலக கோப்பை தொடரிலும் பேட்ஸ்மேன்களுக்கு கடினமான பவுலராக பும்ரா செயல்படுவார் என்பது தெரிகிறது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஸ்டார்க் நன்றாக பந்து வீச வேண்டும். ஆஸ்திரேலியா அணியின் வெற்றி அவர் கையில் உள்ளது.

அதேபோலத்தான் இந்தியாவுக்கு பும்ரா. பும்ரா அதிரடி பவுலர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்திய அணியில் பும்ராவை தவிர்த்து அவருக்கு இணையாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடிய பவுலர்கள் யார்? நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பும்ரா எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். பேட்டிங்கை போலவே பவுலிங்கிலும் இடது கை வலது கை ஜோடி தேவை. டி 20 கிரிக்கெட் போட்டியில் பவுலர்களுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் கிடைக்காது.

ஓரிரு ஓவர்கள் வீசி பழகுவதற்குள்ளேயே போட்டி முடிந்து விடும். எனவே ஓப்பனங்கில் திறமை வாய்ந்த பவுலர்களை இறக்கினால் மட்டுமே உங்களால் போட்டியை வெல்ல முடியும்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது தற்போதைய இந்திய அணியில் பும்ராவுக்கு நிகராக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய தமிழக வீரர் நடராஜன் இல்லாதது இந்தியா அணிக்கு மிக பெரிய பாதிப்பு என மறைமுகமாக ஆஸ்திரேலியா வீரர் தெரிவித்துள்ளார்.