தமிழக வீரர் நடராஜனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் 3 ஆஸ்திரேலியா வீரர்கள்… அலட்சிய படுத்தும் இந்திய கிரிக்கெட் போர்ட்..

0
Follow on Google News

இந்தியன் கிரிக்கெட் அணியையும் சாதியையும் பிரிக்கவே முடியாது என்பது போல இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயருக்கு பின்னால் சர்மா, பட்டேல், யாதவ், ஐயர், ரெட்டி இப்படி இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடக்கூடிய பலருடைய பெயர்களுக்கு பின்னால் அவர்களுடைய சாதியின் பெயரையும் சேர்த்துக் கொண்டுதான் உள்ளனர். பதினோரு பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்து வருவதாக கிரிக்கெட் தொடங்கிய காலம் முதல் தற்பொழுது வரை தொடர் குற்றச்சாட்டுகளாகவே இருந்து வருகிறது.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் நடந்து வரும் செயல்களை பார்க்கும் பொழுது இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையாக இருக்குமோ என்கின்ற சந்தேகமும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.இன்று இந்திய அணியில் மிகச்சிறந்த பவுடராக விளங்க கூடியவர் ஜஸ்ட்பிரிக் புர்மா இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடி 6.48 என்கின்ற கணக்கில் அவருடைய எக்கனாமிக் ரேட் உள்ளது.

இந்நிலையில் புர்மாவுக்கு அடுத்தபடியாக தமிழக வீரர் நடராஜன் 8.83 எக்கனாமிக் ரேட் என்கின்ற விகிதத்தில் மிகச்சிறந்த பவுலர் வரிசையில் புர்மாவுக்கு அடுத்த நிலையில் உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் உலகமே பாராட்டும் வகையில் தன்னுடைய அபார விளையாட்டுத் திறமையை காட்டி இருப்பார் நடராஜன். குறிப்பாக ஹைட்ரபாத் அணி இக்கட்டான சூழ்நிலையில் கடைசி நேரத்தில் பந்து வீசி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் நடராஜன்.

இப்படி மிகத் திறமையாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனை ஏன் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையில் வாய்ப்பு தரவில்லை என தமிழர்கள் மட்டுமில்லை, வட இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் நடராஜ் மிகச்சிறந்த யாக்கர் பவுலர் என தெரிவித்த ஆஸ்திரேலியா வீரர் கம்மிங். இக்கட்டான சூழ்நிலையில் நடராஜனை நம்பி நான் தாராளமாக ஓவர் கொடுப்பேன் என்று நடராஜன் மீது மிக நம்பிக்கையுடன் பேசி உள்ளார் ஆஸ்திரேலியா வீரரும் SRH கேப்டன் கம்மிங்.

அதேபோன்று ஹைதராபாத் அணியின் கோச்சரும் ஆஸ்திரேலியா வீரர்மான பிளேயர் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் நடராஜனை தேர்வு செய்யாது எனக்கு ஆச்சரியமாக உள்ளது தெரிவித்துள்ளார், அது மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் டி20 உலக கோப்பையில் தமிழக வீரர் நடராஜனை இந்திய அணியில் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் அவரை ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி வெளிநாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நடராஜனை ஏன் உலகக் கோப்பை டி20 இந்திய அணி இடம் பெற வாய்ப்பு கொடுக்கவில்லை என நடராஜனுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் நடராஜனை இந்திய அணியில் எடுக்காது எனக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார், அதேபோன்று ஸ்ரீகாந்த் உட்பட பலரும் நடராஜனை இந்திய அணியில் தேர்வு செய்யாதது குறித்து நடராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் நடராஜன் என்கிற ஒரு வீரர் இருக்கிறாரா என கருத்தில் கொள்ளாதது போன்று, ஏன் நடராஜனை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என இது வரை முறையான விளக்கத்தை பிசிசிஐ கொடுக்காமல் அலட்சியமாக கடந்து சென்று கொண்டிருக்கையில், திறைமை இருந்து நடராஜன் திட்டமிட்டு புறக்கணிக்க படுகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.