அம்பெயரின் தவறான தீர்ப்பால் ஆஸ்திரேலியா தோல்வி….தவறான ஐசிசி ரூல்ஸ்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்…

0
Follow on Google News

பொதுவாக கிரிக்கெட் போட்டியில் 11 வீரர்களின் பங்கும் எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு களத்தில் நின்று ஆட்டத்தை உன்னிப்பாக கவனிக்கும் அம்பையரின் முடிவும் மிகவும் முக்கியமானது. அம்பையரின் தீர்ப்பு தவறாகி விட்டால் போட்டியின் முடிவே மொத்தமாக மாறிவிடும். அது மட்டும் இன்றி, அம்பையரின் முடிவை இறுதியானது என்பதால் கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவும் முடியாது.

இப்படியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த அம்பையர் டெட்பால் கொடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேர்ட் அவருடன் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, 2024 ஐசிசி t20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அதிரடியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் பி பிரிவின் 17 வது போட்டி கடந்த ஜூன் எட்டாம் தேதி பார்படாஸ் நகரில் நடந்து முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.இதனால் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை பறிகொடுத்து 201 ரன்கள் குவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது.

இதனால் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது, ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ, அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐசிசி நிர்வாகம் அவரை கண்டித்ததுடன் தண்டனை வழங்கி அதிரடி காட்டியுள்ளது. அதாவது இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத் பந்து வீசும் போது அந்தப் பந்தை கவனிக்காமல் நின்று கொண்டிருந்திருக்கிறார்m

ஆனால் அம்பையர் அந்த பந்திக்கு டெட்பால் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மேத்யூ மைதானத்திலேயே அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து கள நடுவர்கள் நிதின் மேனன் மற்றும் ஜோயல் வில்சன், மூன்றாவது நடுவர் ஆசிப் யாகூப் மற்றும் நான்காவது நடுவர் ஜெயராமன் மதங்கோபால் ஆகியோர் மேத்யூ மீது குற்றச்சாட்டை சுமத்தினர்.

ஐசிசி விதிமுறைகளின் படி களத்தில் நம் பெயருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவறானது என்பதால், மேத்யூவுக்கு இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளை ஐசிசி வழங்கி உள்ளது. அவர் இன்னும் கூடுதலாக ஒரு தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றால், ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் கூட போகலாம். இருப்பினும், வேட் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழியப்பட்ட அனுமதியை ஏற்றுக் கொண்டதால் அவருக்கு ஊதியத்தில் எந்தவித அபராதமும் அளிக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ அப்பையரிடம் நடந்து கொண்ட விதத்திற்கு பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.