தோனிக்கு டப் கொடுக்கும் அஸ்வின் ரவிச்சந்திரன்…ராஜஸ்தான் அணிக்கு உயிர் கொடுத்த தமிழக வீரர் அஸ்வின்…

0
Follow on Google News

அசாமில் உள்ள பர்சாபரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 65 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான அணியில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஸ்விச் ஹிட் சாட் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தார். ஆட்டத்தில் அஸ்வின் முதல் முறையாக ஸ்விச் ஹிட் சாட் அடித்தது பலருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. நடப்பு சீசனில் இதுவரை 65 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் 65 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி மெதுவாக விளையாடி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது. இதை அடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களிலேயே 145 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் வீரர் ராகுல் சகர் வீசிய பந்துகளில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து துவம்சம் பண்ணிய அஸ்வினின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய எட்டு வெற்றி நான்கு தோல்வி என 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் ப்ளே ஆஃப் முன்னேறி உள்ளது. இப்படி ராஜஸ்தான் அணி இந்த சீசனில் அதிரடி காட்டுவதற்கு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் முக்கிய பங்காற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் அபாரமாக திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் அணியும் அவரது திறமையை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, இதற்கு முன்பு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடிய போது, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து மூன்று விக்கெட்டுகளை பறி கொடுக்கவே, அந்த சமயத்தில் களமிறங்கிய ரவிச்சந்தர் அஸ்வின் 19 பந்துகளில் 36 உட்பட 29 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதேபோல் நேற்றைய போட்டியிலும், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறவே ராஜஸ்தான் அணி தடுமாறியது.

இந்நிலையில், களமிறங்கிய அஸ்வின் ரியான் பராக் உடன் கூட்டணி வைத்து விளையாடினார். ரியான் பராக் பௌண்டரி எதுவும் அடிக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அஸ்வின் கிரவுண்டுக்கு வந்ததும் ஹர்பிரித் பராக் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல், பன்னிரண்டாவது ஓவரில் ராகுல்சகர் வீசிய பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின், ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரி என அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

ஒரு சிக்ஸ் அடித்த உடனேயே அடுத்த பந்தில் ஸ்விட்ச் ஹிட் சாட் அடித்து சர்ப்ரைஸ் கொடுத்த அஸ்வினை ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவ்வாறு நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய அஸ்வின் 19 பந்துகளில் ஒரு சிக்ஸ் 3 பவுண்டரிகளை அடித்து 28 ரண்களை குவித்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தானி கௌரவமான ஸ்கோரை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.