இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பில்லை… கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்

0
Follow on Google News

வருகிற ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனையில் கேப்டன் ரோகித் சர்மாவும் பி சி சி ஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கரும் ஈடுபட்டிருந்தனர். ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு வெளியிட்டது.

எதிர்பார்க்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படாததால் பல்வேறு தரப்பினரும் இந்தியா அணி தேர்வு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர். நிலைமை இப்படி இருக்க, டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு இடத்தை மட்டும் அம்பானி தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த பட்டியலில் கேப்டன் ரோஹித் சர்மா சூரியகுமாரி அதாவது ரிஷப் தன் விராத் கோலி உள்ளிட்டோரின் பெயர் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கே எல் ராகுலின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலின் படி, எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் செயல்பட உள்ளனர். தற்சமயம், உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வு குறித்து இணையத்தில் பெரும் விவாத போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது, “ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, ஒரு போட்டியில் கூட ஆடாத ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 17ஆவது சீசனில் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் பயங்கரமாக சொதப்பி இருந்தார்.

இப்படி ஃபார்மில் இல்லாத ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்தது மட்டுமின்றி துணை கேப்டன் பதவியை கொடுத்திருக்கின்றனர். ” என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில், ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்ய ரோகித் சர்மாவும் அஜித் அகர்கரும் விரும்பவில்லை என்றும், அணியில் இருந்து நீக்கவே முடிவு செய்திருந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும் அம்பானி கொடுத்த அழுத்தத்தால் தான் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து பிசிசிஐ செயலாளர் ஜெய் சாவுக்கு அனுப்பிய போது, அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா பெயர் இடம் பெறவில்லை.

இந்த ரகசியம் பிசிசிஐ நிர்வாகிகள் மூலம் ஹர்திக் பாண்டியா காதுக்கு செல்லவே, மும்பை அணியின் கேப்டானக இருக்கும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் உரிமையாளர் அம்பானியிடம் நீங்க தான் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு பெற்று தரவேண்டும் என கதறிய நிலையில், மேலும் தன்னுடைய மும்பை அணியின் கேப்டனுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என்றால் அது தன்னுடைய மும்பை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதால்,

உடனே அம்பானி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியா பெயரை இடம் பெற வைத்துள்ளார். அது மட்டுமின்றி துணை கேப்டன் பதவியையும் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அம்பானியின் செல்வாக்கை பயன்படுத்தி இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ ..