அஜித்திடமே அட்ராசிட்டியை காண்பித்த யோகிபாபு…செம்ம டென்ஷனான அஜித்… வெளியேற்றப்பட்ட யோகிபாபு..

0
Follow on Google News

யோகி பாபு அஜித் இடையில் என்னதான் பிரச்சனை என சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதம் நடைபெற்றது கொண்டு இருக்கிறது. அஜித்துடன் விசுவாசம் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் நடிகர் யோகி பாபு. இந்நிலையில் யோகி பாபுவுக்கும் வலைப்பேச்சு குழுவினருக்கும் ஏற்பட்டுள்ள உச்சகட்ட மோதல் தற்பொழுது சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

அதாவது யோகி பாபு பற்றி தவறாக வலைப்பேச்சு குழுவினர் பேசியதற்கு யோகி பாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது நீங்க எங்களை கவனிக்கவே மாட்டேங்கிறீங்க என்று வலைப்பேச்சு தரப்பினர் பேசியதாக, வலைப்பேச்சு இருப்பவர்கள் பெயரை சொல்லாமல் யோகி பாபு பேசியதை தொடர்ந்து யோகி பாபுவை வெளுத்து வாங்கி வருகிறது வலைப்பேச்சு குழுவினர்.

அதில் ஒரு முறை யோகி பாபு அஜித்தை தொட்டதற்கு டோன்ட் டச் என்று அஜித் யோகி பாபு கையை தட்டி விட்டதாக, அதை யோகி பாபு வலைப்பேச்சு குழுவினரிடம் வந்து தெரிவித்ததாக சொன்னவர்கள் சொல்லி அஜித் ரசிகர்களுக்கும் யோகிபாவுக்கும் இடையில் சண்டை இழுத்து விடும் வகையில் கொளுத்தி போட்டுவிட்டு சென்றுவிட்டனர் வாலை பேச்சு குழுவினர்.

ஆனால் யோகி பாபு வேதாளம் படத்தில் நடித்த போது அஜித் அவரை அமர வைத்து போட்டோ எடுக்கும் ஒரு காட்சியை யோகி பாபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து தனக்கும் அஜித் சாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அஜித் சார் என்னை வைத்து புகைப்படமே எடுத்தவர், அவர் எப்படி நான் தொட்ட போது என் கையை தட்டி விட்டு இருப்பார் என்று மறைமுகமாக வலை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார் யோகிபாபு.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த விஷயத்தை தொடங்கியுள்ள வலைப்பேச்சு தரப்பினர். அஜித் நடித்த வேதாளம் விசுவாசம் படங்களில் நடித்த யோகி பாபு வலிமை படத்திலும் அஜித்துடன் கமிட்டாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வலிமை படத்தில் யோகி பாபு நடிக்கும் காட்சிகளுக்கு முறையாக வராமல் இழுத்தடிப்பு செய்ததாகவும், காரணம் யோகி பாபு கைவசம் பல படங்கள் இருப்பதால் இந்த மாதிரி டைரக்டரை டீலிங் விட்டு விடுவார்.

அப்படித்தான் அஜித்திடமும் தன்னுடைய அட்ராசிட்டியை காட்ட, ஒரு கட்டத்தில் யோகி பாபுக்காக ஒவ்வொரு முறையும் காத்திருத இயக்குனர் எச் வினோத்திடம் இந்த படத்தில் இருந்து யோகிபாவை தூக்கி விடுங்கள் என்ற அஜித் சொல்லி இருப்பார். அந்தக் கோபத்தில் தான் நம்மிடம் வந்து அஜித் குறித்து நான் தொட்டேன் அவர் என்னை தட்டி விட்டார் என்று தவறாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்று, மீண்டும் அஜித் ரசிகர்களுக்கும் யோகிபாவுக்கும் இடையில் சண்டையை மூட்டும் வகையில் வலைப்பேச்சு குழுவினர் கொளுத்தி போட்டு விட்டு சென்று விட்டார்கள்.

இருந்தாலும் பெரும்பாலும் அஜித் ரசிகர்கள் இந்த வலைப்பேச்சு குழுவினரின் பேச்சுகளை நம்பவில்லை யோகி பாபுவுக்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார்கள். காரணம் இதற்கு முன்பு பல பேட்டிகளில் அஜித்தை புகழ்ந்துதான் பேசியுள்ளார் யோகி பாபு, காரணம் இவர்கள் சொல்வது போன்று வலிமை படத்தில் இருந்து அஜித் யோகிபாபுவை தூக்கியதால், அஜித் மீது கோபத்தில் இருந்தால் எதற்காக அடுத்தடுத்து பேட்டியில் அஜித்தை புகழ்ந்து யோகி பாபு பேச வேண்டும்.

அந்த வகையில் யோகி பாபு மீது இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளால் யோகி பாபு சினிமா வாழ்க்கையை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்று யோகி பாபுவை எந்த அளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து வரும் வலைப்பேச்சு குழுவினர். தற்போது அஜித் ரசிகரை யோகி பாபு எதிராக திரும்ப முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் என்று அஜித் ரசிகர்களே வலை பேச்சு சொல்வதை நம்பாமல் யோகிபாவுக்கு சப்போர்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.