படு மொக்கையான மாமன்னன்… கழுவி கழுவி ஊத்தும் விமர்சகர்கள்..

0
Follow on Google News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை திரை விமர்சகர்கள் தலையில் வைத்து கொண்டாடிய நிலையில். தற்பொழுது திரையில் வெளியாயிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தை திரை விமர்சகர்கள் கழுவி கழுவி ஊத்தி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இதற்கு முன்பு மறியேறும் பெருமாள், கர்ணன் படத்தில் கிடைத்த பெயரும் புகழும், இந்த ஒரு படத்தில் மாரி செல்வராஜுக்கு டேமேஜை ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னன் படத்தின் முதல் பாதி முக பெரிய குறை ஏதும் சொல்லமுடியாத அளவுக்கு பார்க்கும் படி உள்ளது, ஆனால் இரண்டாம் பாதி படத்தின் கதைக்கும், முதல் பாதி கதைக்கும் தொடர்பே இல்லாமல் நகர்கிறது மாமன்னன், அந்த வகையில் மாமன்னன் படத்திற்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்றவர்கள், இரண்டு படம் பார்த்த அனுபத்தில் வெளியில் வந்துள்ளார்கள். பேசாமல் முதல் பாதியுடன் படத்தை முடித்து இருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு படு மொக்கையாக இருக்கிறது இரண்டாம் பாதி.

இரண்டாம் பாதியில் இயக்குனர் சீரியசாக சொல்ல வரும் காட்சிகள் பல படு மொக்கையாக அமைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது, வில்லன் தரப்பினர் ஹீரோ தரப்பினரை பிரச்சாரம் செய்ய விடாமல் பல தடை செய்கிறார்கள், உடனே ஹீரோ தரப்பு வீடியோ வாயிலாக சமூக வலைத்தளத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்கொள்கிறார்கள், அது மிக பெரிய ரீச் அடைகிறது என்பது போன்ற காட்சிகள் படு மொக்கையாக அமைத்துள்ளது.

படத்தில் பல காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் உள்ளது, வடிவேலு ஒரு ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், சாதாரணமாக ஒரு கவுன்சிலர் பின்னால் எப்போது 4 நபர்கள் இருப்பார்கள், ஆனால் வடிவேலு தனியாகவே வீட்டில் இருப்பார், தனியாகவே செல்வது, என்னடா இது ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பின்னால் ஒரு நாலு பேராவது எப்போது இருப்பதில்லையா.? என்னடா இது ஆளும் கட்சி எம் எல் ஏ வுக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு படத்தில் லாஜிக்கே இல்லாமல் பல சீன்கள் உள்ளன.

படத்தில் வடிவேலு, அவ்வளவு நல்லது செய்துள்ளார், இவ்வளவு நல்லது செய்துள்ளார் என்கிற வசனம் இடம் பெரும் ஆனால் அவர் என்ன நல்லது செய்துள்ளார் என்கிற காட்சி இடம் பெறவில்லை. மேலும் படத்தில் ஹீரோ – ஹீரோயின் காதல் காட்சிகள் இந்த படத்திற்கு தேவையா என்கிற கேள்வி எழுத்துள்ளது. அந்த வகையில் ஹீரோ ஹீரோயின் காட்சிகளை படத்தில் குறைத்து கொண்டு, மற்ற காட்சிகளை அதிகரித்து இருக்கலாம்.

மொத்தத்தில் மாமன்னன் இரண்டாம் பாதி படு மொக்கையாக அமைத்துள்ளது, மேலும் படத்தின் முதல் பாதி பெரிதாக குறை சொல்வது போன்று இல்லாமல், பார்க்கும்படி இருந்தாலும் கூட, இரண்டாம் பாதியில் படு மொக்கையாக அமைந்து மொத்த படத்தையும் டோட்டல் டேமேஜ் செய்துவிட்டது, அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை பார்த்து மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை மாமன்னன் படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் கொடுத்துள்ளார்.

இப்படி ஒரு மொக்க படத்தை எடுத்துவிட்டு இதில் இன்றளவு தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வரும் தேவர் மகன் படத்தை மாரிசெல்வராஜ் விமர்சனம் செய்யலாமா.? ஒரு இரண்டு படம் வெற்றியை கொடுத்துவிட்டு, இன்று தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் என போற்றப்படும் கமல்ஹாசன் முன்னிலையில் அவரை கேள்வி கேட்கும் விதத்தில் பேசிய மாரிசெல்வராஜூக்கு மாமன்னன் படத்தின் தோல்வி பல பாடங்களை கற்று கொடுக்கும் என்கின்றனர் திரைப்படம் விமர்சகர்கள்.

மேலும் தன்னை சாதி ஒழிப்பு போராளிகளாக வெளிப்படுத்தும் மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்கள் சாதி சார்ந்து படம் எடுக்காமல் இருந்தாலே ஒழிந்து கொண்டிருக்கும் சாதி விரைவில அழிந்துவிடும், ஆனால் இவர்கள் சாதியை ஒழிக்கிறேன் என எடுக்கும் படங்கள் தான் மீண்டும் சாதி பிரச்சனைக்கு கொம்பு சீவுவது போன்று அமையும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கிறாரகள் சமூக பார்வையாளர்கள்..