நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த திரைப்படம் குறித்து பல்வேறும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, விஜய் ரசிகர்கள் படம் வேற லெவல் என்றும் இன்னும் சிலர் படம் எதிர்பார்த்தபடி இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் மாஸ்டர் படத்தின் போஸ்ட் பாக்ஸ் கலெக்சன் எவ்வளவு என்பது பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என பலர் நடித்துள்ளனர், மாஸ்டர் திரைப்படம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2020 பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் 2020 கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்திருந்தனர் படக்குழுவினர்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்தப் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஆனது, ஒருவழியாக இந்த வருடம் பொங்கல் தினத்தன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்தது. மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்ட பின்பு அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கியது. வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஆரம்பத்திலேயே இந்த நல்ல புக்கிங் நடைபெற்றது.
இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழியிலும் திரையிடப்பட்டது, தற்போது இந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது, இதில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, கடந்த நான்கு நாட்களில் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் ஆபீஸ் கலெக்சன் தமிழ்நாட்டில் மட்டும் 71 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் வசூல் 100 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதுவரைக்கும் தமிழகத்தில் பாகுபலி படத்தின் வசூலை எந்த ஒரு திரைப்படமும் முறியடித்தது கிடையாது, ஆனால் மாஸ்டர் திரைப்படம் பாகுபலி வசூலை முறியடித்து விடும் என மாஸ்டர் படக்குழுவினரும் மற்றும் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என இந்த படத்தின் வசூல் குறித்து உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி விரைவில் வெளியாகும் என தெரிகிறது.