இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி, இந்த படத்திற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து, ரஜினிகாந்தின் சினிமா கேரியர் முடிந்துவிட்டது என சிலர் கொக்கரித்துக் கொண்டிருந்த நிலையில், பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவில் நான் யானை அல்ல குதிரை, விழுந்த உடனே எழுந்து விடுவேன் என்று ரஜினிகாந்த் பேசி சினிமாவில் விழுந்த உடனே அடுத்த படத்திலே தன்னுடைய இடத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில் அமைந்தது சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு பி வாசு பல வருடம் ரஜினிகாந்த் கால் சீட்டுக்காக காத்திருந்தார்.
ஆனால் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிக்கொண்டே சென்றார், இதனால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஹிந்தி நடிகை கங்கானா ராணுவத் மற்றும் பலர் நடிக்க சநதிரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய பி வாசு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் இந்த படத்தின் பெரும் பகுதியை எடுத்து முடிக்க உள்ளார்.
இந்த படத்தை முடித்துவிட்டு சென்னையில் ஒரு சில காட்சிகளை மட்டும் எடுத்து முடித்து விட்டால் சந்திரமுகி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கின்றனர். இந்த நிலையில் இன்றைய இளம் இயக்குனர்கள் ஆறு மாதத்தில் எடுக்க வேண்டிய படத்தை ஒரு வருடம் , இரண்டு வருடம் என்று படத்தை முடிக்காமல் இழுத்துக் கொண்டு இருக்க, பி வாசு குறிப்பிட்ட நாட்களுக்குள் சந்திரமுகி 2 படத்தை எடுத்து முடித்துள்ளது.
ஒரு படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் அந்த படத்தை எடுத்து முடிக்கும் பட்சத்தில் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க செல்வதற்கு எளிதாக இருக்கும், மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் மிகப் பெரும் தொகை இழப்பு ஏற்படாது, அந்த வகையில் விடுதலை படத்தை மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியிடாமல் இழுத்தடித்து வரும் வெற்றிமாறன் அவருடைய படைப்புகள் பெரும் அளவு பேசப்பட்டாலும் கூட, ஆனால் ஒரு படத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எப்படி எடுத்து முடிக்க வேண்டும் என்பதை மூத்த இயக்குனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.