நடிகர் விக்ரம் அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் ராஜமௌலிதான் இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் பிரம்மாண்டமான கமர்ஷியல் பட இயக்குனர். அவரின் அடுத்த படத்தில் நடிக்க கதாநாயகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இப்போது அவர் இயக்கியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் வெளியாக உள்ளது. பாகுபலி படங்களுக்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் உருவான அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இந்த படம் உள்ளது.
இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் மற்றொரு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவோடு இணைய உள்ளார். இந்த படத்தின் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகர் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். ராஜமௌலி படங்களில் வில்லனுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் விக்ரம் இதற்கு சம்மதிப்பார் என்றே சொல்லப்படுகிறது.