விஜயகாந்த் பற்றியே தப்பா பேசுறியா.? வடிவேலுக்கு விழுந்த தர்ம அடி… அடி தாங்காம வடிவேலு என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்த், நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெளியிட்ட மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்த பலரும் கண்கலங்கி, கம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது என, விஜயகாந்த் இபப்டி இருப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை என கண்ணீர் வடித்து வருவதை பார்க்க முடிகிறது.

எதற்கு துணிந்த விஜயகாந்த் கோபத்திலும் நியாயம் இருக்கும் என்பதை சினிமா துறையினர் மறுக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் உள்ள எண்ணற்ற கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த், அவரால் நாங்கள் வாழ்ந்தோம் என்று தொடர்ந்து சினிமா துறையில் உச்சத்தில் கொடி கட்டி பறந்த பலரும் விஜயகாந்துக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றும் அவருக்கு தங்களுடைய விசுவாசத்தை காட்டி வருகிறார்கள்.

அப்படி விஜயகாந்தால் சினிமாவில் வாழ்க்கை பெற்ற பல நடிகர்களில் ஒருவர் தான் வடிவேலு, தனக்கு விஜய்காந்து செய்த உதவியை மறந்து, மிக பெரிய உச்சத்தில் இருந்த வடிவேலு, கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் விஜயகாந்தை பேசாத பேச்சே கிடையாது, விஜயகாந்தை எப்போது மைக் பிடித்து வடிவேலு திட்ட ஆரம்பித்தாரோ, அப்போது இருந்தே வடிவேலுவின் சினிமா வாழ்க்கை வீழ்ச்சியை சந்தித்து, இதுவரை சினிமாவில் மீண்டு வரமுடியாமல் தவித்து வருகிறார் வடிவேலு.

இந்நிலையில் பிரபல நடிகர் தியாகு ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு பற்றி இதுவரை வெளிவராத சம்பவம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதில் சின்ன கவுண்டர் படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு குடை பிடித்து கொண்டு செல்வர் நடிகர் வடிவேலு, அப்போது அவருக்கு சம்பளம் ரூபாய் 250, சின்ன கவுண்டர் படப்பிடிப்பின் போது தினமும் மாலை நேரத்தில் விஜயகாந்துக்கு கால் அமுக்கி விடுவார் நடிகர் வடிவேலு, ஆனால் பணம் வந்ததும் வடிவேலுக்கு கண்ணை மறைத்து விட்டது, நிறை குடம் தழும்பாது என்பதற்கு உதாரணம் நடிகர் வடிவேலு.

நடிகர் விஜயகாந்த் வீட்டின் அருகில் ஒரே தெருவில் வீடு வாங்கினார் வடிவேலு, பணம் வடிவேலுக்கு அதிகமானதும், விஜயகாந்த் வீட்டின் அருகில் வீடு வாங்க வேண்டும் என்பதற்காகவே வடிவேலு வீடு வாங்கினார், வக்கீல் பாபா என்பவர் வடிவேலு வீட்டின் எதிர்புறம் இருந்தார், அவர் நடிகர் விஜயகாந்த் உறவினர், வக்கீல் பாபா இறந்ததும் தூக்கம் விசாரிக்க உறவினர்கள் அனைவரும் வடிவேலு வீட்டின் எதிரில் உள்ள வக்கீல் பாபா வீட்டின் முன் குவிந்தனர்.

தேமுதிக தொண்டர்களும் அங்கே குவிந்து இருந்தனர், இந்நிலையில் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் வடிவேலு வீட்டின் அருகில் அவர்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் துக்க வீட்டுக்கு வந்தவர்களிடம் இங்கே வாகனம் நிறுத்த கூடாது உடனே வாகனத்தை எடுக்க வேண்டும் என வடிவேலு சத்தமிட்டுள்ளார், அதற்கு துக்கம் வீடு பிணத்தை எடுத்ததும் வாகனத்தை எடுத்துவிடுவார்கள் என அங்கே இருந்தவர்கள் கூறியுள்ளார்கள், ஆனால் வடிவேலு பிடிவாதமாக துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சண்டையிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அங்கே இருந்தவர்கள் மறைந்தது விஜயகாந்த் உறவினர் தான், கொஞ்சம் பொறுமையாக பேசுங்க என எடுத்து கூற, அதற்கு விஜயகாந்த் என்ன பெரிய இவனா.? என்று ஆபாசமாகவும் விஜயகாந்தை திட்டியுள்ளார், அதற்கு அங்கே இருந்த விஜயகாந்த ஆட்கள் வடிவேலுவை அடி வெளுத்துள்ளார்கள், உடனே வடிவேலு தஞ்சாவூரில் இருந்த நடிகர் தியாகுவை தொடர்பு கொண்டு தன்னை விஜயகாந்த் ஆட்கள் அடிப்பதாக கூறியுள்ளார்.

உடனே அதிகாலை 4 மணிக்கு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியை தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆட்கள் வடிவேலுவை அடித்த சம்பவத்தை தெரிவித்து நீங்க தான் அவரை காப்பாற்ற வேண்டும் என தியாகு கூறியுள்ளார், பின்பு நாஞ்சில் குமரன் என்கிற காவல் துறை ஆணையரை தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆட்களிடம் இருந்து வடிவேலுவை கைப்பற்றியதாக வடிவேலு அடிவாங்கிய சம்பவத்தை நடிகர் தியாகு பேட்டி ஒன்றில் தெரிவித்து தற்பொழுது வைரலாகி வருகிறது.