கேப்டன் விஜயகாந்த் மறைந்து நாட்கள் கடந்தாலும் இன்னும் அவருடைய நினைவுகள் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை, ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டால் அவரை மண்ணில் புதைக்கும் போதே இறந்து விடுவார்கள், ஆனால் விஜயகாந்த் ஒருவர் மட்டும் தான் அவருடைய உடல் மண்ணில் புதைக்கப்பட்டாலும் இன்னும் அடுத்த நூறாண்டுக்கு மக்கள் இதயத்தில் உயிரோடு வாழ்வார் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு மக்களாக வாழ்ந்து விட்டு சென்றுள்ளார் விஜயகாந்த்..
விஜயகாந்த் மறைந்தும் கடவுளாக தொடர்ந்து பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். விஜயகாந்த் மறைந்து அவருடைய உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து சென்ற போது, அவருடைய உடலை கருடன் என்று அழைக்கக்கூடிய இரண்டு கழுகு வட்டமிட்டு மக்கள் அனைவரையும் அண்ணாந்து பார்த்து கும்பிட செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அதே போன்று விஜயகாந்த் 16ம் நாள் காரியத்தின் போது, அவரது சமாதியில் விஜயகாந்த் மனைவி மற்றும் அவருடைய மகன்கள் இருவரும் அன்னதானம் வழங்கி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கருடன் தோன்றி வானத்தில் வட்டமிட்டது. கோவில் கும்பாவிஷேகம் நடக்கும் போது கருடன் கோவில் கோபுரத்தில் உள்ள கும்பத்தை சுற்றி வட்டமிடும், அப்படி வட்டமிடும் போது கடவுளே நேரில் வந்து ஆசி வழங்குகிறார் என மக்கள் அண்ணாந்து பார்த்து கருடனை கையெடுத்து கும்பிடுவார்கள் அதே போன்ற நிகழ்வுக்கு விஜயகாந்த் சமாதி மற்றும் அவருடைய உடலை வட்டமிட்டது விஜயகாந்த் மறைந்த உடனே கடவுளாக உருவெடுத்து கருடன் வடிவில் தோன்றியுள்ளார் என்றே மக்கள் கையெடுத்து கும்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவருடைய வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பதில் மிக ஆர்வமாக இருப்பார். அந்த வகையில் , அவர் ஆசையாய் வளர்த்த வெள்ளை கிளி ஒன்று அவரை, “கேப்டன்.. கேப்டன்..” என்று தான் கூப்பிடுமாம் , அதனாலே அந்த கிளிக்கு கேப்டன் என்றே பெயர் வைத்து விட்டார்கள். தற்பொழுது அந்த கிளி, வீட்டில் கேப்டனை காணவில்லை என்கிற சோகத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்தின் உருவப்படத்தை சுற்றி சுற்றி கேப்டன் கேப்டன் என கூவியது அனைவரையும் கண் கலங்கவைத்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்த போது அங்கு வந்த ஒரு சாமியார் , பிரேமலதாவிடம் சென்று விஜயகாந்த் பற்றி பேச ஆரம்பித்தார்.. அப்போது அவர் பேசிய ஒவ்வொரு வரிகளையும் கேட்டு பிரேமலதா பிரமித்து போயுள்ளார்.
அந்த சாமியார், கேப்டன் எங்கும் போகவில்லை.. உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்.. காசி விஸ்வநாதர் என் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி தன்னிடம் சொன்னதாகவும், அதனால் தன இங்கே வந்தேன் என தெரிவித்த சாமியார். திடீரென அருள் வந்து விஜயகாந்த் குரலிலேயே பேசினார்..
பிரேமலதாவை பார்த்து, என்னை பத்தி உனக்கு தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்கே போகப்போறேன்? பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன்” என்று விஜயகாந்த் குரலில் சாமியார் பேச ஆரம்பித்ததும் பிரேமலதா கண்கலங்கி விட்டார். இதை பார்த்தவர்கள் ஏழை மக்களுக்கு இருக்கும் போது அள்ளி அள்ளி கொடுத்த விஜயகாந்த், மறைந்தும் கடவுளாக அவதரித்த ஏழை மக்களை எப்போதும் கைவிடமாட்டார் கேப்டன் என தெரிவித்து வருகிறார்கள்.