விஜயகாந்துக்கு நடந்த ரகசிய சிகிச்சை…. கால் விரல்கள் எடுக்கப்பட்ட பின்னனி காரணம்… விஜயகாந்த் கடைசி நிமிடங்கள்…

0
Follow on Google News

மதுரையில் விஜயராஜ் என்கிற பெயரில் பிறந்த நடிகர் விஜயகாந்த், தந்தைக்கு சொந்தமாக மிக பெரிய ரைஸ் மில் மதுரையில் இருந்தது, அந்த வகையிலே சிறு வயதிலே வசதி படைத்த குடும்பத்தில் சொகுசாக வளர்ந்து வந்தவர் விஜயகாந்த, படிப்பின் மீது பெரிதும் ஆர்வம் இல்லாத விஜய்காந்த் 10ஆம் வகுப்பை தாண்டி அவர் படிக்கவில்லை. சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் நுழைந்த விஜயகாந்த் கடும் போராட்டத்திற்கு பின்பு தனக்கென ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

இயல்பாகவே கோபம் குணம் கொண்ட விஜயகாந்த், கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல், பலர் வாழ்கை பிரகாசமாக இருக்க காரணமான விஜயகாந்த் நல்ல குணம் கொண்டவர் என்பது யாராலும் மறுக்க முடியாத ஓன்று, தமிழ் சினிமா துறையில் ஆளுமை மிக்கவராக உயர்ந்த விஜய்காந்து தென் இந்திய நடிகர் சங்க தலைவராக பொறுப்புக்கு வந்தார்.

பின்பு கடனில் மூழ்கிவந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்த பெருமை அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்தை தான் சேரும். சினிமாவில் துறையில் மிக பெரிய நட்சத்திர அந்தஸ்துடன் செல்வாக்கு மிக்கவராக விஜயகாந்த் வலம் வந்த போதே, அரசியல் என்ட்ரி கொடுக்கும் விதமாக, மதுரையும் கட்சி தொடங்கி, அடுத்த சில மாதங்களில் நடந்த 2006 சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்து, மாற்றத்தை விரும்பிய மக்களின் நம்பிக்கையை பெற்ற விஜயகாந்த், முதல் தேர்தலில் 8 சதவீததிற்கும் மேல் வாக்குகளைப் பெற்றது மட்டும் இல்லாமல், ஒற்றை தேமுதிகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக கோட்டைக்குள் சிங்கம் போல் நுழைந்தார் விஜயகாந்த். அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் யாருடன் கூட்டணி அமைக்காமல் தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி காண்பித்தார் விஜயகாந்த்.

அடுத்து நடந்த 2011 தேர்தலில் 21 இடங்களை வென்றது மட்டும் இல்லாமல், ஜெயலலிதா அரியணை ஏறச் செய்ததில் முக்கிய பங்காற்றிய விஜயகாந்த், திமுகவை ஓரம்கட்டி பிரதான எதிர்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். சட்டசபையில் ஏற்பட்ட சலசலப்புக்கு சிங்கம் போல் அதிமுகவினருக்கு எதிராக கர்ஜித்தார் விஜயகாந்த்.

இதன் பின்பு முக்கிய அரசியல் கட்சிகளும் அவர்களுடன் இணைந்து சில மீடியாக்களும் ஓன்று இணைந்து விஜயகாந்துக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு, அவரை ஒரு கேலி சித்திரம் போன்று காண்பித்து சரிவை நோக்கி விஜயகாந்தை தள்ளிவிட்டு முக்கிய பங்கு தமிழகத்தில் உள்ள சில மீடியாக்களுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், அவருக்கு உடலில் என்னென்ன பிரச்சனை என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைராய்டு, கல்லீரல் பிரச்சனை உள்ளிட்டவை இருந்துள்ளது.இந்த நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றை மியாட் மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியதாக கூறப்படுகிறது. தைராய்டு பிரச்சனையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை கொடுத்து வரப்பட்டுள்ளது.

மேலும் சிறுநீரக பிரச்சனையும் இருந்தது. ஆனால் அது நாளடைவில் சரியானது. அவருக்கு முதுகுதண்டு வடத்திலும் பிரச்சனை இருந்தது. தைராய்டும் சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்தது. அதேபோல், அரை மணி நேரம் கூட உட்கார முடியாமல் தவித்து வந்துள்ள விஜயகாந்த் சமீபத்தில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து விஜய்காந்த் உயிர் பிரிந்துள்ளது.