இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், 90களின் தொடக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானபோது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். தன் அப்பா சந்திரசேகர் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தாலும், ரசிகர்களின் மனதில் ஹீரோவாக இடம் பிடிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது. தொடர்ந்து தந்தை இயக்கத்தில் ஹீரோவாக நடித்து தோல்வியை மட்டுமே பெற்று வந்தார் விஜய்,
இந்த சூழலில் தான் அன்று தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த விஜயகாந்த் விஜய்க்கு மிகப்பெரும் உதவியை செய்துள்ளார். நீங்க ஒரு படம் என் மகன் விஜய் உடன் இணைந்து நடித்தால் என் மகன் விஜய் மக்கள் மத்தியில் ஒரு நடிகராக அறியப்பட்டவர் என சதந்திரசேகர் விஜயகாந்தை சந்தித்து கேட்க உடனே சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டில் வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொண்டார்.
அப்போது “தம்பி விஜய்க்காக இது கூட பண்ண மாட்டேனா” என்று சந்திரசேகரிடம் கூறி விஜய்க்காக அந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். அந்த படமும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இப்படி விஜயின் சினிமா கரியரில் முக்கியமான காலத்தில் அசால்டாக உதவி செய்து தூக்கி விட்ட விஜயகாந்த் நடிகர் விஜய்யை கையைப் பிடித்து செந்தூரப்பாண்டி படத்தில் தம்பி என்று விஜயகாந்த் அறிமுகப்படுத்தவில்லை என்றால் விஜய் கடைசி வரையும் தொட்டபெட்டா ரோட்டு கடையில் முட்டை பரோட்டா என ரோட்டில் ஆடிக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், அப்படி ஒரு சூழல் தான் விஜய்க்கு அமைந்திருக்கும்,
அதே போன்று விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு தொடர்ந்து பல படங்கள் விஜயகாந்த் நடித்ததால் தான் மிகப்பெரிய இயக்குனராகவும் எஸ் ஏ சந்திரசேகர் உருவெடுக்க முடிந்தது.விஜய் குடும்பத்திற்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்து வந்தவர் விஜயகாந்த, இதை விஜய் தந்தையே பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்,
அப்படி இருக்கையில் சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலே ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்தை அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை நேரில் சந்தித்து உடல் நிலை விசாரித்தாலும், விஜய் ஒரு முறை கூட நேரில் நேற்று விஜயகாந்தை சந்திக்க வில்லை. தமிழகத்தின் உச்ச நடிகராக இருக்க கூடிய ரஜினிகாந்த், தமிழக முதல்வர் என அனைவரும் விஜயகாந்தை நேரில் சென்று உடல் நலம் விசாரித்து வந்த நிலையில், கடைசி வரை விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்த வீட்டுபக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.
விஜய் குடும்பத்தை வாழ வைத் விஜயகாந்த் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து கூட விஜய் சொல்லாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, விஜயகாந்த் வீட்டில் இருக்கும் போது தான் விஜய் எட்டி கூட பார்க்க வில்லை, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல் நலம் குறித்து விஜயகாந்த் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட விசாரிக்கவில்லை என கூறப்படுகிறது.
விஜய் என்னதான் பிசியான நடிகராக விஜய் இருந்தாலும், தான் இன்று சினிமாவில் உயரத்துக்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் என்கிற நன்றி உணர்வு கொஞ்சமாவது விஜய்க்கு இருந்திருந்தால் விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த போதும், மருத்துவமனையில் இருந்த போதும் ஓடோடி வந்து உடல் நலம் விசாரித்து இருக்க வேண்டும் விஜய், ஆனால் விஜயகாந்த் உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை விஜயகாந்தை எட்டி பார்க்காத விஜய்யை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.