சிவகுமார் நேரில் அழைப்பு… வரமுடியாது என முகத்தில் அடித்தது போல் சொன்ன விஜயகாந்த்..

0
Follow on Google News

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்கள் டிசம்பர் 28ஆம் தேதி காலை 6:10 மணியளவில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் கட்சித் தொண்டர்கள் ,திரையுலக பிரபலங்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும், அரசியல்வாதிகள், தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதே சமயம், நடிகர் சூர்யாவும் வெளிநாட்டில் இருந்து வீடியோ ஒன்றை எடுத்து தனது இரங்கல் செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

விஜயகாந்த் ஒரு நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் என்பதையும் தாண்டி மனிதநேயமிக்கவர் என்பது பலருக்கும் தெரியும். அன்றைய காலகட்டத்தில் ரஜினி கமல் என சினிமாவில் முன்னணி நடிகர்கள் கொடிகட்டி பறந்த போதிலும், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி கஷ்டப்பட்டு சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். சினிமாவில் பல்வேறு கலைஞர்களுக்கும் சாப்பாடு போட்டு உதவியும் செய்து இருக்கிறார்.

சினிமாவில் வளர்ந்த பிறகு, கஷ்டப்பட்டவர்களுக்கு ஓடோடி உதவியும் செய்து இருக்கிறார். அதனாலையே இன்றளவிலும் விஜயகாந்த் மீது பலரும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கின்றனர்.. அவ்வளவு ஏன், இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யாவிற்கு கூட விஜயகாந்த் மிகப் பெரிய உதவி செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் ஆரம்ப காலத்தில் பெரியண்ணா படத்தில் நடித்துக் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.

இந்த படத்தில் விஜயகாந்த் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனாலேயே, சிவக்குமார் குடும்பத்திற்கும் விஜயகாந்த் நல்ல பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்த பழக்கத்தின் காரணமாக, தனது மூத்த மகன் சூர்யாவின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க சிவகுமார் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று இருக்கிறார். ஆனால் விஜயகாந்த் “எனக்கு சூர்யா ரொம்ப பிடிக்கும் .. இருந்தாலும் என்னால் கல்யாணத்துக்கு நேரில் வர முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் “தற்போது கட்சி தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறேன்!அது சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிடிக்கவில்லை …நான் கட்சி துவங்க கூடாது என்று பல்வேறு தரப்பில் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள், இப்படிப்பட்ட சூழலில் நான் அங்கு வந்தால் அது பலருக்கும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.எனவே என்னால் கல்யாணத்திற்கு வர முடியாது” என்று காரணத்தையும் சிவகுமாரிடம் சொல்லிவிட்டாராம். இருப்பினும் சூரியா- ஜோதிகா திருமணம் முடிந்த பிறகு, அவர்களை வீட்டில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த கேப்டன், திருமண பரிசையும் வழங்கி ஆசிர்வாதம் செய்ததாக கூறப்படுகிறது.