தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமல் இணையாக முன்னணி நடிகராக இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். அணைத்து தரப்பு ரசிர்கர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் நடிகர் சங்கத்துக்கு பொன்னான காலம் என்றே சொல்லலாம், கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை மீட்டு எடுத்த பெருமை நடிகர் விஜயகாந்தை தான் சேரும்.
உதவி மனப்பான்மை கொண்ட நடிகர் விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை செய்து வந்தவர். அது மட்டும் இன்றி தான் சார்ந்த சினிமா துறையினர் கஷ்டத்திலும் பங்கேற்று அவர்கள் வாழ்க்கையில் ஒளி வீச முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த், இவரால் சினிமா துறையில் பலன் அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
நடிகர் வடிவேலுவுக்கு சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று தந்த நடிகர் விஜயகாந்த். அப்போது வடிவேலு மாற்று துணி இல்லாமல் கஷ்டப்பட்டபோது அவர்தான் வடிவேலுக்கு பத்து வேஷ்டியும் 10 சட்டையும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் நன்றி உணர்வு இல்லாமல் வளர்ச்சி அடைந்ததும் நடிகர் விஜயகாந்தை எதிர்த்து சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போனார் வடிவேலு என்பது மறுக்க முடியாத வரலாறு.
அதேபோன்று ஒரு முறை தனுஷ் வீட்டிற்கு சென்றுள்ளார் விஜயகாந்த். அப்போது கஸ்தூரிராஜா தனது இரண்டாவது மகளுக்கு ஒரு மார்க் பத்தாமல் மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை என விஜயகாந்த்திடம் சோகத்துடன் புலம்பியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த் உடனே என் கூட வாங்க என அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, ராமச்சந்திரா கல்லூரி உடையார் அவர்களை விஜயகாந்த் வீட்டிற்கு அழைத்து பேசியுள்ளார்.
இதன் பின்பு கஸ்தூரிராஜா இரண்டாவது மகளுக்கு மருத்துவ படிக்க உதவி செய்துள்ளார் விஜயகாந்த். இதுபோன்று சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கு உதவி செய்துள்ள விஜயகாந்த் தன்னுடைய இமேஜ் பற்றி சற்றும் கவலைப்படாமல் வளர்ந்து வரும் நடிகர்கள் தன்னுடைய படத்தில் அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
பொதுவாக நடிகர் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் தங்களை தாண்டி மற்ற நடிகர்கள் ஓவர் டெக் செய்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அதை எல்லாம் பொருட்படுத்த மாட்டார். நடிகர் விஜயகாந்த் உடன் ஒரு படம் நடித்தால் மக்கள் மத்தியில் எளிதாக சென்று அடைந்து விடுவார் விஜய் என்பதற்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் தம்பியாக விஜய் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்.
இதன் பின்பே விஜய் என்கிற நடிகர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதேபோன்று நடிகர் சூர்யா மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக பெரியண்ணா படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை சூர்யாவுக்கு கொடுத்தவர் விஜயகாந்த். இப்படி பலர் வாழ்க்கை பிரகாசமாக இருக்க ஒளியேற்றிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்தை தமிழக முதல்வர் தொடங்கி, ரஜினிகாந்த் உட்பட பலர் நேரில் சந்தித்து பல முறை உடல்நலம் விசாரித்து வந்தனர்.ஆனால் செந்தூர பாண்டி மூலம் விஜயகாந்த் மூலம் சினிமாவில் வாழ்கை பெற்ற விஜய் மற்றும் பெரியண்ணா படத்தில் மூலம் வாழ்க்கை பெற்ற சூர்யா இருவரும் நேரில் சென்று விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரிக்க வில்லை.
தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தை, இப்பாவது நேரில் சென்று நலம் விசாரிப்பார்கள் என்றால், விஜய் எட்டி கூட பார்க்க வில்லை, இதில் நடிகர் சூர்யா சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை மட்டும் போட்டுள்ளார். ஆனால் சூர்யா மருத்துவமனை சென்றும் நேரில் விஜயகாந்த் உடல்நலம் விசாரித்துவிட்டு விஜயகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் வரவேண்டும் என பதிவு போட்டிருந்தால் வரவேற்க தக்கது.
ஆனால் தங்களுக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்த விஜயகாந்த் தீவிர சிகைச்சையில் இருக்கும் பொழுது, நேரில் சென்று உடல் நலம் விசாரிக்க கூட நேரம் இல்லை என்ன மாதிரியான உலகம் இது என்கிற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.