மது போதைக்கு விஜயகாந்த் அடிமையா.? உண்மையை உடைத்த விஜயகாந்த் ட்ரைவர்…

0
Follow on Google News

தேமுதிக கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான ‘கேப்டன்’ என்று செல்லமாக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்கள் டிசம்பர் 28ஆம் தேதி காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய இழப்பானது கட்சித் தொண்டர்கள், திரைப்பட நடிகர்கள், மக்கள் என அனைவரையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டு சென்ற விஜயகாந்த் உடல்நலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தற்பொழுது விஜயகாந்தை கொண்டாடும் சிலர், அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காலத்தில் விஜயகாந்த் மதுவுக்கு அடிமையாக இருந்தார் என்று வாய்க்கு வந்ததை பேசியவர்கள் தான், ஒரு முறை விஜயகாந்த் மது அருந்துவதாக ஜெயலலிதா விமர்சனம் செய்த போது, ஜெயலலிதா எனக்கு ஊற்றி கொடுத்தாரா என தரமான பதிலடி கொடுத்து இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் ஜெயலலிதாவையே ஆப் செய்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் பலரும் விஜயகாந்திற்கும் தங்களுக்குமான உறவினைப் பற்றி பரவலாக பேச ஆரம்பித்துள்ளனர். அவ்வரிசையில் 30 வருடங்களாக விஜயகாந்திடம் டிரைவராக கூடவே இருந்தவரான வெங்கடேஷ் தனது முதலாளி விஜயகாந்த் பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுவரை எந்த ஊடகத்தின் முன்பும் வராதவர் இப்பொழுது வந்துள்ளார்.

அவர் பேசுகையில், விஜயகாந்த் எனக்கு உடன்பிறவா சகோதரர் ஆவார். என்னை அவர் ஒரு பொழுதும் அவரிடம் வேலை செய்யும் தொழிலாளியாக நினைத்து பேசியதில்லை. என்னை அவர் ஓர் தம்பியை போல பார்த்துக் கொள்வார். மேலும் நானும் அவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளோம், அவர் என்னை வெளிநாட்டிற்கு எல்லாம் அழைத்துச்சென்று உள்ளார்.

அவ்வாறு செல்லும்போது ஹோட்டலில் என்னை அவருடன் ஷோபாவில் தான் படுக்க அனுமதிப்பார். நான் கீழே படுத்துக் கொள்கிறேன் என்றாள் என்னை விட மாட்டார். எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் கேட்கும் முன்பே செய்து விடுவார். எனக்கு விஜயகாந்த் அவர்களை முதன்முதலாக இப்ராஹிம் ராவுத்தர் மூலமாகத்தான் தெரியும். முதலில் அவர்தான் என்னை டிரைவராக சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் விஜயகாந்திடம் கூறி அவரது டிரைவராக இருக்கச் சொன்னார்.

அப்போது விஜயகாந்த் அவர்கள் இவன் என்னுடைய டேஸட்க்கு மேட்ச் ஆவானா என்று இப்ராஹிம் ராவுத்தரிடம் கேட்டார். அதற்கு அவர் உன் டேஸ்ட் எனக்கு தெரியும் சூப்பரா ஓட்டுவான் என்று சொன்னார். அன்று முதல் இன்று வரை தான் கேப்டன் டிரைவராக 30 வருடங்களாக இருக்கிறேன். முதன்முதலாக நானும் விஜயகாந்தும் காரில் சென்றது 1989இல் வெளியான கே.சங்கர் இயக்கிய மீனாட்சி திருவிளையாடல் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குதான். போகும்போதே தம்பி வேகமாக ஓட்ட வேண்டும் என்றார்.

உடனே அடித்துத் தூக்கி வண்டியை ஓட்டினேன். நான் டிரைவர் மற்றும் மெக்கானிக் என்பதால் நான் அடித்து ஓட்டியது பார்த்து கேப்டன் மேக் அப் ரூம் உள்ளே சென்றதும் சூப்பர் பையன்டா நான் இவனையே வைத்துக் கொள்கிறேன் என்று ராவுத்தரிடம் கூறினார். என்னைவிட வேகமாக கார் ஓட்டுவார் விஜயகாந்த். என்னை பின்னால் உட்காரவைத்து விட்டு நடிகர் ராதாரவியும் கேப்டனும் சேலம் டு கோயம்புத்தூர் ரைய்டு பண்ணுவார்கள்.

கேப்டனுக்கு புல்லட் ரைய்டு ரொம்ப பிடிக்கும். மதுரையில் இருக்கும்போதே புல்லட் பைக் வைத்திருந்தார். அவர் முதன்முதலாக வைத்திருந்த அவருக்குப் பிடித்ததுமான வண்டி TMM2. இப்போது வரை வைத்திருக்கிறார். அதன்பிறகு அவர் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மா கொடுத்த வேன்.

மேலும் வெங்கடேஷிடம் விஜயகாந்த் மதுப்பழக்கம் பற்றிக் கேட்டதற்கு, உலகத்தில் குடிக்காத மனிதர் யார் தான் உண்டு. விஜயகாந்த் போலக் கடினமான சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் ஈடுபடும் நடிகர்கள் யாருமே இல்லை, மிகக் கடுமையாகச் சண்டைக்காட்சிகள் செய்வார். அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது ஆனால் அவரை அறியாதவர்கள் சொல்வதைப் போல் அவர் அடிமையாக இல்லை என்று தனது முதலாளி கேப்டன் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வெங்கடேஷ்.