விஜயை வைத்து ஒரே ஒரு படம் தயாரித்து நடு தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்… வெட்கமே இல்லாமல் கேக் வெட்டி கொண்டாடிய விஜய்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த தயாரிப்பு நிறுவனம், தேனாண்டாள் பிலிம்ஸ். அதன் உரிமையாளர் இந்தியாவில் கின்னஸ் சாதனை பெற்ற இயக்குனர் ராமநாராயணன், சுமார் 125 படங்களை தயாரித்து, இயக்கியவர் ராமா நாராயணன், அது மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு என இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாரித்து இயக்கியவர் ராம நாராயணன்.

இவர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கவில்லையே தவிர மற்றபடி அனைத்து நடிகர்களையும் வைத்து இயக்கி வெற்றி பெற்றவர் ராமநாராயணன். இப்படி தயாரிப்பாளர், இயக்குனர் என தொடர் வெற்றியை கொடுத்து பணம் சம்பாரித்து வந்த ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பலர் சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இயக்குனராக சாதனை படைத்தனர்.

ராமநாராயணன் தயாரிப்பு இயக்கத்தில், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 4 படங்கள் வரை படப்பிடிப்பு நடக்கும், உதவி இயக்குனர்களிடம் ஒன்லைன் கதையை எழுதிக் கொடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு அனுப்பி வைப்பார்,.இது போன்று ஒரே நாளில் சுமார் 4 படப்பிடிப்புகள் ராமநாராயணன் மேர் பார்வையில் நடந்து வரும். ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய உதவி இயக்குனர்கள் குறுகிய காலத்திலே இயக்குனராகும் வல்லமை பெற்று விடுவார்கள்.

ஏனென்றால் அந்த அளவுக்கு வேலையில் ஈடுபாடு உள்ளவர்கள் எளிதாக வெற்றி பெற்று விடக் கூடிய வகையில் சுதந்திரமாக செயல்பட வாய்ப்புகளை அளித்து வந்தவர் ராமநாராயணன். மேலும் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தை கையாண்டவர் ராமநாராயணன், உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் போன்ற படங்களை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சென்று அட்வான்ஸ் தொகையை கொடுத்து விடுவார் அதன் பின்பு முக்கிய ஏரியாக்களை வளைத்துப் போட்டு விடுவார் ராமநாராயணன்,

அந்த ஏரியாக்களை ராமநாராயணன் விற்று லாபம் பார்த்து விடுவார். அப்படி ஒரு விற்பனை தந்திரம் ராமநாராயனிடம் உண்டு. இதுபோன்று சுமார் 125 படங்கள் வரை தயாரித்து சொத்துக்களை சேர்த்தவர் ராமநாராயணன். வடபழனியில் பல கட்டிடங்கள் சொத்துக்களாக ராம நாராயணனுக்கு இருந்தது. அப்பேர்பட்ட ஒரு தயாரிப்பாளர் இனி சொந்தப் படம் எடுத்தால் லாபம் இல்லை எனத்தெரிந்து, தயாரிப்பு துறையை விட்டு விலகினார். அதன் பின்பு இறந்தும் போனார்.

பெரும் சொத்துக்களையும் லாபத்தையும் சினிமா தயாரிப்பின் மூலம் சம்பாதித்த ராமநாராயணனின் மகன் முரளி. தனது தந்தை மறைந்த பின்பு நடிகர் விஜய்யை வைத்து ஒரே ஒரு படம் தயாரித்தார், அந்த படத்தின் பெயர் மெர்சல், அந்த படம் வெளியான பொது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காரணம் அந்த படத்தின் இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் இருவரும் சேர்ந்து தேவையின்றி உண்மைக்கு புறம்பான சர்ச்சைக்குரிய வசனங்களை அந்த படத்தில் இடம் பெற வைத்தது தான்.

மேலும் இந்த படம் பெரும் நட்டத்தை பெற்று இந்த படத்தில் வேலை செய்த மேஜிக் மேனுக்கு சம்பள பாக்கியை கூட கொடுக்காமல் பெரும் பெரும் சர்ச்சையானது. பல கோடிகள் செலவு செய்து மெர்சல் படம் தயாரித்த பின்பு தேனாண்டாள் பிலிம்ஸ் பல கோடி கடனில் மூழ்கியது.இதன் பின்பு அந்த கடனை சரி செய்ய ஒரு படம் உங்கள் தயாரிப்பில் நடித்து தருகிறேன், படம் வெற்றி பெற்று விட்டது என அறிவித்து விடுங்க என நடிகர் விஜய் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால் விஜய் சொன்னது போன்று நடந்து கொள்ளவில்லை. இந்நிலையில் மெர்சல் படத்துக்கு பின்பு இதுவரை படம் எந்த ஒரு படமும் தயாரிக்கவில்லை. 125 படங்கள் தயாரித்து வெற்றிக்கொடி நாட்டிய தேனாண்டாள் பிலிம்ஸ் விஜயை வைத்து ஒரே ஒரு படம் எடுத்து கடனில் மூழ்கி தத்தளித்து கொண்டிருக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.