விஜய் மண்ணை கவ்வுவது உறுதி… விஜய் அரசியிலுக்கு அப்பு வைக்கும் புஸ்ஸி ஆனந்த்…

0
Follow on Google News

விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த சமீப காலமாக விஜய் மாணவர்கள் சந்திப்பு, பாடசாலை திறப்பு, என விஜய்யின் நடவடிக்கை மூலம் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய புதிய கட்சியின் பெயரை வெளியிட்டு, தற்பொழுது கைவசம் இருக்கும் படத்தை முடித்துவிட்டு 2026 சட்டசபை தேர்தலை களம் காண்போம் என அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார் விஜய்.

விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், விஜயை ஒரு சிலை போல் செதுக்கிய அவருடைய தாய் தந்தையிடம் ஆசி பெற்ற எந்த ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை, அந்த வகையில் தற்போது வரை விஜய் அவர் தாயுடன் பேசினாலும் கூட தந்தையுடன் இணக்கமாக இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் இன்று அரசியலுக்கு வருகிறார் என்றால், அவரை அரசியலுக்கு தயார்படுத்தியவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான்.

சினிமாவில் எப்படி விஜய் உச்ச நடிகராக வருவதற்கு பின்புலமாக விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இருந்தாரோ, அதேபோன்று விஜய்க்கு அரசியல் தீயை மூட்டி விட்டு, விஜயின் மக்கள் மன்றங்களை எஸ் ஏ சந்திரசேகர் கட்டுப்பாட்டில் வைத்து மிக சிறப்பாக செயல்படுத்தி வந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். ஆனால் எப்போது புஸ்ஸி ஆனந்த் விஜயுடன் நெருக்கமானாரோ, அதன் பின்பு விஜய்க்கும் அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்க்கும் இடையில் உரசல் மிகப் பெரிய அளவில் வெடித்ததாது என கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விஜய் அவருடைய தந்தையுடன் பேசுவதே நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க புஷி ஆனந்த் ஆலோசனைப்படியே தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி வந்துள்ளார், இந்த நிலையில் விஜய் அவருடைய தந்தைக்கும் விஜய் மக்கள் மன்றத்திற்கும் எந்த ஒரு தொடர்பு இல்லை என்று அதிரடியாக அறிவித்து தந்தையை ஒதுக்கி வைத்தாலும் கூட எஸ் ஏ சந்திரசேகரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து விஜய் மக்கள் மன்றத்தில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் பிடிக்காத விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கக்கூடிய விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் நிச்சயம் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் உள்ளே வந்துவிடுவார், அதன் பின்பு நம்மளுக்கான பிரச்சனைகள் அவரிடம் சொல்லி தீர்வு செய்து விடுவோம் என்கின்ற நம்பிக்கையிலும் இருந்து வந்தனர்.

அந்த வகையில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே எஸ் ஏ சந்திரசேகர் கோஷ்டி, புஸ்ஸி ஆனந்த் கோஷ்டி என இரண்டு கோஷ்டி இருந்து வந்துள்ளனர். தற்பொழுது விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் ஆதரவாளர்களை புஸ்ஸி ஆனந்த் ஓரம் கட்டும் வகையில், எஸ் ஏ சந்திரசேகர் கோஷ்டியினர் யாருக்குமே புஸ்ஸி ஆனந்த் பொறுப்பு வழங்காமல் தனக்கு தலையாட்டக் கூடியவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை வழங்கி வருவது, புதிதாக விஜய் கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழகத்திற்குள் எஸ்ஏசி கோஷ்டியா.? இல்லை புஸ்ஸி ஆனந்த் கோஷ்டியா.?வா… யாரு பெருசுனு அடிச்சு பார்த்து விடுவோம் என வடிவேலு நகைசுவை காட்சிகளில் வருவது போன்று இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் நடந்து வரும் மோதல் போக்கு எப்போது வேண்டுமானாலும் பெரிதளவில் பொது வெளியில் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.