ஏமாற்றிய விஜய்… நேர்மையை நிரூபித்த ரஜினிகாந்த்…சொன்ன சொல்லை காப்பாற்றணும் விஜய்…

0
Follow on Google News

விஜய் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் கடந்த சில வருடங்களாக பொருளாதார ரீதியில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதில் சுமார் 30 வருடங்களாக தொடர்ந்து எந்த ஒரு பின்னடைவும் இல்லாமல் லாபாத்தை குவித்து வந்த தேனான்டாம்பல் பிலிம்ஸ், விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்து பெரிய நஷ்ட்டத்தை சந்தித்து, அதன் பின்பு அவர்கள் பெரும்பாலும் படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார்கள்.

இதே போன்று விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்து AGS நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால் நஷ்டம் அடைந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு அடுத்து ஒரு படம் கால்சீட் தருகிறேன் என விஜய் தயாரிப்பு நிறுவனத்துக்கு உறுதியளித்துள்ளார். விஜய் அடுத்த படத்துக்கு கால் சீட் தருகிறேன் என்று உறுதியளித்ததை நம்பி விஜயை வைத்து எடுத்த படம் நஷ்டம் அடைந்தாலும், வெற்றி வெற்றி என கொண்டாடியது தயாரிப்பு நிறுவனம்.

அந்த வரிசையில் விஜய் நடிப்பில் வெளியாகி படு தோல்வியை சந்தித்து , திரைக்கு வந்து ஒரே நாளில் காற்று வாங்கி கொண்டிருந்த பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர், அந்த படத்தில் அடைந்த நஷ்ட்டத்தை சரி செய்ய நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்ததாக அப்போது தகவல் வெளியானது. அந்த வகையில் விஜய் சம்பள தொகையை குறைத்து சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனத்துக்கு மேலும் ஒரு படத்துக்கு கால் சீட் கொடுக்க விஜய் தரப்பு சம்மதம் சொன்னதாக கூறப்பட்டது.

ஆனால் அதை சொன்னது போன்று செய்யவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய்யை வைத்து மேலும் ஒரு படம் தயாரித்து அது நஷ்டத்தை சந்தித்தால் பெரும் சிக்கலாகிவிடும் என்பதால் தயாரிப்பு நிறுவனங்களும் விஜய்யை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். அதே நேரத்தில், ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்தின் நஷ்டத்தை சரி செய்ய அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் ரஜினியின் சம்பளத்தை குறைத்து மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் ரஜினிகாந்த் அவருடைய சினிமாவில் வரும் வசனம் போன்று கொடுத்த வாக்கும், கொடுத்த பொருளை திருப்பி வாங்கினதா சரித்திரமே இல்லை என்று சினிமாவில் பேசியது போன்று சொன்ன சொல்லை காப்பாற்றும் விதத்தில் நடந்து கொண்டார் ரஜினிகாந்த், சொன்னது போன்றே அண்ணாத்தே படம் நஷ்டத்தை சரி செய்ய சன் பிக்சர் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து பல கோடி லாபத்தை சன் பிக்சர் நிறுவனத்திற்கு பெற்று கொடுத்தார் ரஜினிகாந்த்.

அதே போன்று ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், லால் சலாம் போன்ற படங்கள் நஷ்டம் அடைந்ததை தொடர்ந்து அந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு, மீண்டும் ஒரு படம் கால் சீட் கொடுத்து வேட்டையன் படத்தில் நடித்து கொடுத்தார். அந்த வகையில் ரஜினிகாந்த் தன்னை வைத்து படம் தயாரித்து நஷ்டம் அடைந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு மீண்டும் கால் சீட் கொடுத்து கை கொடுத்தார் ரஜினிகாந்த்.

ஆனால் நடிகர் விஜய் ஒவ்வொரு படம் தோல்வியை சந்திக்கும் போது, அடுத்து ஒரு படத்துக்கு கால் சீட் தருகிறேன்,தருகிறேன் என்று ஆப் செய்து தோல்வி அடைந்த படத்தை வெற்றி அடைந்தது போன்று கொண்டாடி விட்டு. பின்பு அவர்களை காக்க வைத்து ஏமாற்றி வந்த விஜய் தற்பொழுது அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பதால், இனி அடுத்து சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து விட்டார் அந்த வகையில் விஜய்யால் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்கள், அவர் கால் சீட் தருவார் என நம்பி கடைசி வரை ஏமாற்ற அடைந்தது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.