நடிகர் தனுஷ் தன்னுடன் நெருங்கி பழகும் நடிகைகளுக்கு தன்னுடைய தயாரிப்பில் பட வாய்ப்பு கொடுப்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் நடந்தி வந்த காலம் அது. அப்படித்தான் தன்னுடன் நெருங்கி பழகிய நடிகை அமலாபால், தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி போன்றோருக்கு தன்னுடைய தயாரிப்பில் பட வாய்ப்புகளை வாரி வழங்கி வந்தார் தனுஷ். தனுஷ் தயாரிப்பில் நடித்த நடிகைகளுக்கு அதன் பின்பு டைவர்ஸ் ஆனது கதையெல்லாம் வேறு.
அப்படித்தான் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்கின்ற படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ். நடிகர் தனுசுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் நட்ப்பை தாண்டிய ஒரு நெருங்கிய உறவு இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு இயக்குனராக அறியப்படாத இடத்திலிருந்து போது நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.
மேலும் விஜய் சேதுபதி அப்போது மிகப்பெரிய நடிகரும் கிடையாது அந்த காலகட்டத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பதே மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக ஆனது. அப்படி இருக்கும் பொழுது விஜய் சேதுபதி சம்பளம் இல்லாமல் மொத்தம் ஆறு கோடிக்குள் நானும் ரவுடி தான் படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்கின்ற ஒரு உத்தரவோடு விக்னேஷ் சிவனை வைத்து நானும் ரவுடிதான் என்கின்ற படத்தை தொடங்குகிறார் தனுஷ்.
படம் தொடங்கிய சில நாட்களிலேயே விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்கிறது, இருவரும் வானத்தில் பறக்கும் காதல் ஜோடிகளாக பறக்கத் தொடங்கி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிய நண்பரான நயன்தாரா தனுஷை விட விக்னேஷ் சிவனிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டார். ஒரு கட்டத்தில் நயன்தார அருகில் பழையபடி நெருங்கி தனுஷ் செல்ல முடியதபடி தடையாக இருந்தார் காதலன் விக்னேஷ் சிவன்.
இதை தனுஷால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இது தனுசுக்கு மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தினாலும் கூட இந்த படத்தை தொடங்கி விட்டோமே என்று, வேற வழியில்லாமல் அந்த எரிச்சலுடனே படத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார் தனுஷ். இருந்தாலும் படப்பிடிப்பு நேரங்களில் அடிக்கடி கேரவன் உள்ளே சென்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அரட்டை அடிக்கும் தகவல் தனுசுக்கு செல்ல மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்று தனுசுக்கு வயித்தெரிச்சல் அதிகமாகிறது.
இதனைத் தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் படப்பிடிப்பில் அடிக்கும் லூட்டியால் படப்பிடிப்பு மேலும் தாமதமானது தொடர்ந்து ஆறு கோடியில் முடிக்க வேண்டிய படத்தை 16 கோடியில் கொண்டு வந்து விட்டு விட்டனர் விக்னேஷ் சிவன். கடைசியில் தனுஷ் பணத்திலே நயன்தாரா உடன் காதலை வளர்த்து விக்னேஷ் சிவன் தனுஷ்க்கே விபூதி அடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இதனால் உச்சகட்ட கோபத்தில் இருந்த தனுஷ், நானும் ரவுடி தான் படத்தில் கடைசியில் ஒரு பாடல் எடுக்க வேண்டிய நேரத்தில் நீ படம் எடுத்து கிழிச்சதெல்லாம் போதும் இதுவரை எடுத்தவரை ரிலீஸ் செய்வோம் என்கின்ற முடிவுக்கு தனுஷ் வந்ததும். நயன்தாரா தன்னுடையாசொந்த பணத்தில் அந்த பாடல் எடுக்க விக்னேஷ் சிவனுக்கு உதவி செய்து இருக்கிறார். அந்த வகையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் தான் தனுசால் பொறுத்து கொள்ள முடியாத கோபம் அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையிலான பிரச்சனைக்கு காரணம் என் கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.