அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல்தான், சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் அஜித் படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் அஜித்தின் விடாமுயற்சிக்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. அஜித் குமார் தன்னுடைய மனைவி த்ரிஷாவை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார், ஒரு கட்டத்தில் அஜர்பைஜானில் உள்ள ஒரு கும்பல் த்ரிஷாவை கடத்தி செல்கிறார்கள்.
மனைவியை பிரிந்த அஜித் எப்படி தன்னுடைய மனைவியை தேடி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தோட மீதி கதை என படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தகவல் வெளியானது, இந்நிலையில் விடாமுயற்சி படம் , ஒரு வகையில் படம் பார்ப்பவர்களை டென்ஷானின் எல்லைக்கே கொண்டும் சென்று விடுகிறது, அந்த அளவுக்கு நொடிக்கு நொடி என்ன நடக்க போகிறத, என்பதை கணிக்க முடியாத கட்சிகளோடு இயக்குனர் மகிழ் திருமேனி காட்சி படுத்தியுள்ளார்.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/actor-ajithkumar-1024x575.jpg)
மேலும் மனைவியை பிரிந்த கணவன் விரக்தியில் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை எதார்த்தமாக காட்டியுள்ளார் மகிழ் திருமேனி. படத்தில் ஹீரோயிசமும் இல்லாமல், கதைக்கான அழுத்தத்தை அஜித் தன்னுடைய நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளது பாராட்டும் வகையில் அமைத்துள்ளது. மர்மமான முறையில் அஜித் மனைவி திரிஷா காணாமல் போய்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு காட்சியும் த்ரில்லாக நகர்கிறது.
இப்படி படத்தில் அடுத்து என்ன அடுத்து என்ன என்கிற ட்விஸ்ட் படம் பார்பவர்களை நகர விடாமல் செய்கிறது. இப்படி படத்தின் கிளைமஸ் காட்சி வரை த்ரில்லாக நகர்கிறது விடாமுயற்சி. படத்தின் முதல் பாதி இறுதியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பது, முதல் 30 நிமிடங்கள் படம் மெதுவாக சென்றாலும் விறுவிறுப்பான திரில்லர் கதையாக நகர்கிறது. மேலும் விடாமுயற்சி படத்தில் மாஸான ஓபனிங் சீன் இல்லை. மாஸ் பிஜிஎம் இல்லை.
பில்டப் இல்லை. ஆனால் மகிழ் திருமேனி முதல் பாதியை விறுவிறுப்பாக கொடுத்து, அதற்கு அனிருத்தின் பிஜிஎம் வலு சேர்த்துள்ளது. மொத்தத்தில் சலிப்பை உண்டாக்கும் காட்சிகள் இல்லை, படத்தொகுப்பு கச்சிதமாக உள்ளது, ஒளிப்பதிவு, படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது, நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம், மொத்தத்தில் விடாமுயற்சி முதல் பகுதி அருமை என்று தான் சொல்ல வேண்டும், அஜித், அர்ஜுன், ஆரவ் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருக்கிறது.
விடாமுயற்சி இரண்டு ஹாலிவுட் படங்களின் ரீமேக் என்றாலும், கடைசி 25 நிமிடங்கள் பிரமிக்க வைக்கிறது, கார் சாகசக் காட்சி வேற லெவல், கிளைமாக்ஸ் காட்சி குறைவாக இருந்தாலும் மிகவும் அழகாக வடிவமைத்து உள்ளார் மகிழ் திருமேனி.
மொத்தத்தில் அஜித்தின் ஆக்சன் காட்சிகள், அஜித் – திரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள், அர்ஜுனனின் வில்லத்தனம், அனிருத்தின் பின்னணி இசை, மகிழ் திருமேனியின் விறுவிறுப்பான இயக்கம் என படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்துள்ளது. பொதுவாகவே மகிழ்திருமேனி படம் என்றாலே சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும், இதில் இருப்பதால் சொல்லவே வேண்டாம்.
அஜித்தின் லுக்கும் அவர் உடல் எடை குறைத்து மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. அஜித் – அர்ஜூன் காம்போ திரையரங்குகள் தெறிக்கிறது, நிச்சயம் எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் விடாமுயற்சி.