எந்த ஒரு பில்டப் இல்லாமல் தொடங்கும் விடாம முயற்சி திரைப்படம், அஜித்துக்கு இந்த படத்தில் எந்த ஒரு மாஸ் என்ட்ரியும் கொடுக்காமல் மிக சாதாரணமாக தோன்றுகிறார் அஜித் . இந்த படத்தின் கதை அஜிதும் அவருடைய மனைவி த்ரிஷாவும் விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்கிறார்கள். இதனால் திரிஷா அவருடைய அம்மா வீட்டுக்கு செல்ல முடிவு செய்கிறார்.
அப்போது அஜித் நானே வந்து உன்னை விட்டு விட்டு செல்கிறேன் என்கிறார், சுமார் 9 மணி நேரம் ட்ராவல் , இந்த பயணத்தில் அஜித் மனைவி திரிஷாவை ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது, தொடர்ந்து அஜித் இந்த தேடுதல் வேட்டையை தொடங்குகிறார், யார் கடத்தியது.? யார் வில்லன் என்கின்ற மிகப்பெரிய ட்விஸ்ட் இந்த படத்தில் நீடிக்கிறது.
இந்த படம் வெளியாவதற்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் என்கின்ற ஒரு படத்தின் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்கின்ற சர்ச்சை வெடித்தது, இதற்காக அந்த பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு மீது நஷ்ட ஈடும் கேட்டது, இதனால் படம் வெளியாவதற்கு தாமதமானது, ஆனால் இந்த படம் வெளியான பின்பு தான் தெரிந்தது பிரேக் டவுன் படத்திலிருந்து ஒரு வரி கதையை மட்டும் இந்த படத்தின் இயக்குனர் மகில் திருமேனி எடுத்துக் கொண்டு, அவருக்கான பாணியில் முழு கதையையும் விரிவுபடுத்தியிருக்கிறார்.
இந்த படத்தை பார்க்கின்றவர்களுக்கு இதில் வில்லன் யார்.?நல்லவர் யார்.? வில்லி யார்.? என எளிதாக கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒவ்வொரு கேரக்டரையும் மகிழ் திருமேனி தன்னுடைய திறமையால் செதுக்கி இருக்கிறார். அதே நேரத்தில் அஜித்துடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்குமே இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதாபாத்திரத்தை அமைக்க அஜித் வழிவகை செய்துள்ளார்.
அந்த வகையில் மகிழ்ந்திருமேனியிடம் முழு படத்தையும் அஜித் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் சொல்வதை கேட்டு நடிப்பது மட்டும்தான் என்னுடைய வேலை என்று, 100% இந்த படத்தை மகிழ்த்திருமியிடம் அஜித் ஒப்படைத்து விட்டார் என்பது இந்த படத்தைப் பார்ப்பவர்களுக்கு தெரிகிறது. காரணம் இந்த படம் அஜித் படம் இல்லை, மகிழ் திருமேனி படம் என்று சொல்லும் வகையில் அமைத்துள்ளது.
இந்த படத்தில் குறைகள் என்று சொன்னோம் என்றால், முதல் 20 நிமிடம் காதல், அந்தக் காதலுக்கான பிளாஷ்பேக், இப்படி படம் டல்லாக சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நடிகை திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் ஈர்ப்பு ஏற்பட்டு, அஜித்தை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். அந்த வகையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் விவாகரத்து.
அதன் பின்பு மனைவியை ஒரு கும்பல் கடத்துகிறது, இந்த படம் முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சிகளையும் ஹாலிவுட் தரத்திற்கு மகிழ் திருமேனி செதுக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும், அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அஜித் வரும் பொழுது ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக ஒரு ஹாலிவுட் ஸ்டார் ஆகவே தோன்றுகிறார் அஜித் குமார்.
அந்த வகையில் நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய விடா முயற்சி கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் அஜித் தெறிக்க விட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த படம் பிரேக் டவுன் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று வரும் செய்தி உண்மை இல்லை, அந்த படத்தில் இருந்து ஒரு வரி கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தப் படம் முழுக்க முழுக்க மகிழ் திருமேனியின் சிந்தனையில் உதித்த படமாகவே அமைந்துள்ளது.