வேட்டையன் 240 கோடி.. GOAT 150 கோடி … என்னடா விஜய் அண்ணாவுக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

விஜய் நடித்த கோட், ரஜினி நடித்த வேட்டையன் இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்கின்ற போட்டி ரணகளத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே விஜய் – ரஜினி ரசிகர்களுக்கிடையிலான மோதல் தற்பொழுது உச்சகட்டத்தை ஏற்றியுள்ளது. கோட் படம் வெளிய ஆவதற்கு முன்பே ரஜினி ரசிகர்கள் கோட் படம் குப்பை என்று ரிவ்யூ கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அட என்னய்யா படமே இன்னும் ரிலீஸ் ஆகல எப்படி அந்த படம் குப்பை என்று உனக்கு தெரியும் என்றால், எனக்கு சென்சார் போட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இந்த படம் குப்பை என்று என எதிர்மறை விமர்சனத்தை விஜய் நடித்த கோட் படத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டு பரப்பினார்கள். அதே போன்று கோட் படம் வெளியான பின்பும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கோட் படம் மிக மோசம் என்றும்.

அதே நேரத்தில் வேறு ஒரு திரைப்படம் ஓடிய திரையரங்குகள் இருந்த காலி இருக்கைகளை வீடியோவாக எடுத்து, இது கோட் படம் வெளியிட்ட திரைப்படத்தின் காட்சி, அங்கே மக்கள் கூட்டமே இல்லை என்பது போன்ற பல பொய்யான தகவல்களை ரஜினி ரசிகர்கள் விஜய் நடித்த கோட் படத்திற்கு எதிராகவும் பரப்பி வந்தன. குறிப்பாக ஒரு படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வரும்பொழுது அந்த படத்தின் வசூல் நிச்சயம் பாதிப்படையும்.

அந்த வகையில் கோட் படம் வெளியான நேரத்தில் ரஜினி ரசிகர்கள் கோட் படம் நல்லா இல்லை, நல்லா இல்லை என்று பரப்பிய தகவல் பலரும் உண்மையிலேயே இந்த படம் நல்லா இல்லை போல என்று பார்க்காமல் தவிர்த்து விட்டார்கள், உண்மையிலே கோட் படம் நல்லா இல்லை என்பது இரண்டாவது விஷயம், இருந்தாலும் இப்படி கோட் படத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்களின் அவதூறுகளையும் முறியடித்து சுமார் 445 கோடி வசூல் செய்துள்ளது விஜய் நடித்த கோட் திரைப்படம்.

இந்த நிலையில் எப்படி ரஜினி ரசிகர்கள் விஜய் நடித்த கோட் படத்திற்கு எதிராக திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொண்டு வந்தார்களோ.? அதே பார்முலாவை தற்போது விஜய் ரசிகர்கள் ரஜினி நடித்த வேட்டையன் படத்திற்கு செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் செய்த ஒரு முட்டாள்தனமான செயல்கள் ரஜினியின் படத்திற்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும் வகையில் அமைந்துள்ளது.

பொதுவாகவே ஒரு நடிகனின் படத்தை அந்த நடிகனின் ரசிகன் மட்டும் பார்த்தால் அது வெற்றி பெறாது. அனைத்து ரசிகர்களும் பார்த்தால் மட்டுமே அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெரும். அந்த வகையில் வேட்டையன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் விஜய் ரசிகர்களை கிண்டல் செய்யும் வகையில் காக்கா புகைப்படத்தை அங்கே வைத்து ரஜினி ரசிகர்கள் செய்த செயல்.

விஜய் ரசிகர்களை ரஜினி நடித்த வேட்டையன் திரைப்பட வெளியான திரையரங்கு பக்கமே வரவிடாமல் தடுத்து விட்டது. இதனால் பாதிப்பு ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் தான் என்பது அந்த ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதே நேரத்தில் விஜய் – ரஜினி இவர்கள் ரசிகர்களுக்கிடையிலான உச்சகட்ட மோதல் என்பது என்றைக்கு ரஜினி மேடை ஒன்றில் கழுகு, காக்கா கதையை சொன்னாரோ அன்றிலிருந்து தான் இவர்களின் மோதல் உச்ச கட்டத்தை அடைந்தது.

அந்த வகையில் ரசிகர்களை மோத விடுவது இந்த இரண்டு நடிகர்கள் தான் என்பது இந்த ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஒரு நடிகர் படம் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறது என்று கொண்டாடும் ரசிகருக்கு பத்து பைசா லாபம் இல்லை, இப்படி ஒரு படத்தை கொண்டாடி வெற்றியடைய செய்வதால் அந்த நடிகனுக்கும் அந்த தயாரிப்பாளருக்கு தான் லாபமே தவிற அந்த ரசிகனுக்கு இல்லை.

அதேபோன்று ஒரு படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி அந்த படத்தை தோல்வி அடைய செய்வதாலும் அந்த ரசிகருக்கு எந்த ஒரு லாபமும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, இந்த ரசிகர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் அனைவரிடமும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லித் திருத்த வேண்டும் ஆனால் அவர்களின் சுயநலத்திற்காக இப்படி ரசிகர்களை தூண்டி சுய லாபம் சம்பாதிக்கும் இந்த நடிகர் நடிகர்கள் இருக்கும் வரை இதுபோன்ற ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது ஒரு மறுக்க முடியாத வருத்தப்படக்கூடிய ஒரு தகவல்

அதே நேரத்தில் தற்பொழுது வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அந்த படம் நான்கு நாட்களில் 240 கோடி வசூல் செய்தது என்றும் ஒரு தகவலை வெளியிட்டு ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வசூலை விஜய் ரசிகர்கள் நம்பவில்லை அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் விஜய் நடித்த கோட் திரைப்படம் நான்கு நாட்களில் வெறும் 150 கோடி தான் வசூல் செய்தது அதை முறியடித்து விட்டது வேட்டையன் படம் என்றெல்லாம் ஒரு தகவலை பரப்பி இப்படி இரண்டு ரசிகர்களும் மோதிக் கொள்வது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here