வைரமுத்து அந்த மாதிரி நடந்து கொண்டார்…என் பொண்ணு துடி துடித்து தப்பித்து வந்தார்… சின்மயி அம்மா சொன்ன தகவல்…

0
Follow on Google News

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கும் சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே என்று வசீகரிக்கும் காந்தக்குரலின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் பாடகி சின்மயி. இவர், பல பாடல்களை பாடி பாராட்டுகளையும், புகழையும் பெற்றுள்ளார். இவர் எத்தனை வேகமாக வளர்ந்தாரோ, அத்தனை வேகமாக சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் வளர்ந்தார்.

சின்மயி மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் மற்றும் டப்பிங் கலைஞரான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு இரண்டைக் குழந்தை பிறந்தது. மேலும் சின்மயி சமூக கொடுமைக்கு எதிராக தனது கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வரும் இவர், பெண் வன்கொடுமைக்கு எதிராக அதிகமாக குரல் கொடுத்துள்ளார்.

தன்னிடம் கவிஞர் வைரமுத்து அத்துமீறியதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டினை சில வருடங்கள் முன்னர் சொல்லி இருந்தார். இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து அடிக்கடி வைரமுத்து குறித்து புகார்களை பேசிக்கொண்டே இருப்பார் இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பனிப்போரே ஏற்பட்டு, அந்த விவகாரம் தற்போது வரை புகைந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து சின்மயி அம்மா பத்மாசினி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், சின்மயியை வைரமுத்து கூப்பிட்டு தேசிய விருதுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்க போகிறோம். விரைவாக வாருங்கள் என்று கூறியிருந்தார். இதனால் நானும் என்னுடைய மகள் சின்மயியும் வைரமுத்து இருந்த இடத்திற்கு போனோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் சின்மயி வைரமுத்துவை பார்க்க சென்றிருந்தார்.

அப்போது நான் படிக்கட்டுகளில் மேலே ஏறி போகப் போனேன். சின்மயி தலையெல்லாம் களைந்து ஒற்றை செருப்போடு கீழே பயந்து ஓடி வந்தாள். அங்கு ஏதோ தவறு நடந்துள்ளது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரிடம் எதுவும் கேட்காமல் அந்த இடத்திலிருந்து அழைத்து வந்து விட்டேன். நீங்கள் அந்த இடத்திலேயே போலீசுக்கு போன் செய்திருக்கலாம், வைரமுத்துவை கேட்டிருக்கலாம் என்று கேட்பீர்கள். அது சரிதான்.

ஆனால், எது நடக்குமோ அதை தான் நடக்கும். நாங்கள் இப்போதும் மானம், கௌரவத்திற்கு பயந்து தான் அந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்தோம். சின்மயி தோள் மீது வைரமுத்து கை போட்டு நெற்றியில் முத்தம் கொடுத்திருந்தார். இதை அவள் வீட்டிற்கு வந்த பின்பு தான் சொன்னார். உடனே நான், அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி விட்டேன். இதை நான் அங்கேயே கேட்டிருந்தால் நான் அன்பாகத்தான் முத்தம் கொடுத்தேன் என்று வைரமுத்து சொல்லி இருப்பார்.

அது உண்மையிலேயே நல்ல தொடுதலா? இல்லை கெட்டதா? என்பது சின்மயிக்கு மட்டும் தான் தெரியும். அது கெட்ட தொடுதலாக இருந்ததால் தான் சின்மயி அங்கிருந்து பயந்து ஓடி வந்து விட்டாள். மீ டு விவகாரம் வரும்போது சின்மயி இடம் பலருமே, உங்களுக்கு ஏதாவது நடந்ததா? என்ன பிரச்சனை? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட நான் அவருடைய காலில் விழுந்து தயவுசெய்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லாதே என்று சொன்னேன்.

ஆனால், அவள் அதையும் மீறி சொன்னார். பிறகு தான் சின்மயி சொன்னது நல்லது என்று எனக்கு புரிந்தது. மேலும், வைரமுத்து தேசிய விருதுகள் வழங்கும் குழுவை தன்னுடைய கைக்குள் வைத்திருந்தார். இதனால் வெளியில் சொன்னால் என்னுடைய மகளின் வாழ்க்கை பாதித்து விடுமோ என்ற பயத்தில் தான் சொல்லவில்லை. ஆனால், அதையெல்லாம் எதிர்த்து என் மகள் தைரியமாக சொன்னார் என சின்மயி தாய் தெரிவித்துள்ளார்.