உன் உதடுகளை தொட விரும்புகிறேன் என வெளிப்படையாக கேட்ட வைரமுத்து.! பின் நடந்தது என்ன.?

0
Follow on Google News

பாடலாசிரியர் வைரமுத்து மீது மீண்டும் பாலியல் குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், அவர்களுக்கு நேர்ந்த அந்த சம்பவத்தை சில்வர்ஸ்கிரீன் இந்தியாவில் வெளிவந்ததை பிண்ணனி பாடகி சினமயி அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார், அதில் பெயர் குறிப்பிடாத அந்த பெண் கூறியதாவது, “நான் முன்பு ஒரு வேலைக்காக அவரைச் சந்தித்தேன், கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டேன். அவருக்கு எப்போதுமே கொஞ்சம் ‘நற்பெயர்’ உண்டு, உங்களுக்குத் தெரியுமா?

அன்று மீண்டும் ஒரு வேலை சம்பந்தமாக நான் அவர் அலுவலகத்திற்கு சென்றேன். அவருடன் தனியாக இருந்தேன். என்னிடம் மோர் வேண்டுமா என்று கேட்டார், “இங்கு சிறந்த மோர் தயாரிக்கிறார்கள்.” “சரி, சார்” என்றேன்’. மோர் வந்த போது வைரமுத்து என்னிடம், “நீ குடிப்பதைப் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த கிளாஸ் தொடும் உதடுகளை நான் தொட விரும்புகிறேன்” என்றார். இது மிகவும் சங்கடமாக இருந்தது. பெண்களிடம் இயல்பாக சரசமாடும் ஆண்களை நான் அறிந்திருக்கிறேன், ஆனால் இதுபோன்ற ஒன்றை மிகவும் வயதான ஒருவரிடம் இருந்து கேட்பது மோசமாக இருந்தது. இத்தகைய வயதான ஒருவர் என்னுடன் உதடுகளைப் பற்றி பேசுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை”

யாரோ ஒருவர் அந்த அறையில் பூக்களை விட்டுச் சென்றிருந்தனர். அப்போது வைரமுத்து இந்த இளம்பெண்ணை தன்னிடம் அழைத்தார். அவள் அருகில் சென்று என்ன வேண்டும் என்று கேட்டபோது: ”அவர் என் மேல் ஒரு பூவை வைத்து என்னை முத்தமிட முயற்சித்தார். அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் என்னை விட உயரமானவர் (அந்தப் பெண் மிகச் சிறியவள்). அவர் என்னை முத்தமிட முயன்றார். நான் கீழே குனிந்து விட்டேன். என்னை முத்தமிடவோ, தொடவோ நான் அவரை அனுமதிக்கவில்லை.

நான் அந்த அறையில் குறுக்காக ஓடினேன். பெஸன்ட் நகர் வீட்டில் அந்த அறை மிகப் பெரியது. நான் ஓடினேன். நான் என்னுடைய பையை எடுத்துக்கொண்டேன் அவரைப் பார்த்து “பிறகு சந்திக்கிறேன் சார்” என்று கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு ஓடினேன். நான் வெளியே ஓடுவதை அனைவரும் பார்த்தார்கள். அவரது அனைத்து ஊழியர்களும்…” அதற்குப் பிறகும் வைரமுத்து தன்னை அழைத்ததாக அந்தப் பெண் கூறினார். “அவர் என்னை அழைத்து கெஞ்சுவார், “நீங்கள் ஏன் என்னை பார்க்க வரவில்லை. அய்யாவ ஏன் வந்து பாக்க மாட்டேங்கறீங்க?” தன்னைச் சந்திக்குமாறு அவளைத் தொந்தரவு செய்யும் போதும் வைரமுத்து தன்னை மரியாதையாக ‘அய்யா’ என்று குறிப்பிட்டுக் கொண்டார்.

இந்த அழைப்புகளில் இருந்து வெளியே வர முயன்றவள், அவரிடம் “என் நண்பர்கள் என்னை வர அனுமதிக்கமாட்டார்கள்” என்றாள். அதற்கு அவர், “அவர்களிடம் நீ கவிஞரை சந்திக்கச் செல்வதாகச் சொல். நீ பாடப் போவதாகச் சொல்” என்றார். அவளுடைய தோழர்கள் அருகில் இருக்கும்போது அவள் போனை எடுத்தால், வைரமுத்து தனது பேரை மாற்றிச் சொல்வார். “அவர் நம்பரில் இருந்துதான் அழைப்பு வந்திருக்கும், ஆனாலும் அவர் தன் பெயரை மாற்றியே சொல்வார் அல்லது தவறான எண்ணிற்கு அழைத்துவிட்டதாகப் பாசாங்கு செய்வார்.”

இதுபோன்ற பல சம்பவங்களுக்குப் பிறகு, ஒருமுறை வைரமுத்து அழைத்தபோது அந்தப் பெண் தன் சக ஊழியரை பேசவைத்தார். “அது ஒரு தவறான எண் என்றும் என்னுடைய எண் இல்லையென்றும் என் அலுவலக நண்பரைச் சொல்ல வைத்தேன். அதன் பிறகு அவர் என்னை அழைப்பதை நிறுத்திவிட்டார்” இது அவருக்கு நடந்த பிறகு வைரமுத்திடம் தொடர்பில் இருப்பவர்கள், இனி தொடர்பு கொள்ள வாய்ப்பிருப்பவர்கள் என தனக்குத் தெரிந்த அனைத்து பெண்களையும் எச்சரித்தாக அவர் கூறினார். “அந்த நபர் இப்படிப் பட்டவர். அதனால் அவர் இடத்திற்குச் செல்ல தயவு செய்து பெண்களைப் பரிந்துரைக்க வேண்டாம்…” இதைத்தான் நான் அவர்களிடம் சொல்வேன்.

இந்தப் பிரச்சனைகளுக்கு முந்தைய ஒரு சாதாரண உரையாடலில் இந்தப் பெண் வைரமுத்துவிடம், அவர் கவிதைகள் மற்றும் திரைப்பட பாடல்களுக்கான உந்து சக்தி எது கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பாடலில், அப்படத்தில் நடிக்கும் பிரபல கதாநாயகியின் உடலைக் கற்பனை செய்து ஒரு பாடல் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். இந்தப் பதிலை மேலும் விவரிக்க விரும்பியவராக இருந்தார்.

இதைச் சொல்லும்போது அந்தப் பெண்ணின் குரலில் பதட்டமும் அருவெறுப்பும் நிரம்பியிருந்தது. அந்தப் பிரபல கதாயகியின் மார்பகங்களை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மிகவும் சஞ்சலப்படுத்தக் கூடிய இதை அவர் என்னிடம் சொன்னார். ஆனால், கவிஞர்கள் ஒருவேளை இப்படித்தான் பேசுவார்கள் என்று நினைத்தேன். அவ்வாறு கூறி என்னை நான் ஆறுதல்படுத்தினேன் என்று சிரித்தாள் அவர். “நான் அவரைப் பற்றி அதிகமாக பேசமாட்டேன் ஏனென்றால் நான் மிகவும் சஞ்சலமடைந்திருந்தேன்…. ஆனால் அவர் இதைச் செய்கிறார் என்பதை நான் குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன் என பெயர் குறிப்பிடாத அந்த பெண் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.