பல பிரச்சனைகளுக்கு பின்பு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுக்கு, லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடிப்பதற்காக வாய்ப்பும் கிடைத்தது. அதில் இரண்டு படம் வடிவேலு கதாநாயகனாகவும் மற்ற படங்கள் காமெடியனாகவும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. லைக்கா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன் படத்தில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சொல்வதை வடிவேலு கேட்பதில்லை, கதை காட்சிகள் அனைத்துமே வடிவேலு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி படத்தை கெடுத்துள்ளார். அதேபோன்று லைக்கா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பில் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பி வாசு மற்றும் வடிவேலு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இதனால் படத்தின் படப்பிடிப்பை மிக சிரமத்துடன் நடத்தி வருகிறார் பி வாசு. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பி வாசுவை தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம் வடிவேலு நடிக்கும் காட்சிகளை பெரும் அளவு குறைத்து விடுங்கள் என்றும். முடிந்தளவு அவருக்கு இந்த படத்தில் வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு காலை 9 மணிக்கு வடிவேலுவை வருவதற்கு தகவல் அனுப்பினால், அதற்கு 10 மணிக்கு வருகிறேன் என்கிறார் வடிவேலு, சரி சார் 10 மணிக்கு வாங்க என்றால் 11 மணிக்கு வருகிறேன் என்கிறாராம், சார் கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்றது,சரி காலை 9 மணிக்கு வருகிறேன் என உறுதியளித்துவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வராமல் போன் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம் வடிவேலு.