MGR பார்முலாவை கையில் எடுத்த உதயநிதி… அஜித் , விஜயை ஓவர் டேக் செய்ய பக்கா பிளான்..!

0
Follow on Google News

உதயநிதி ஸ்டாலின் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் கூட ஆரம்ப கட்டத்தில் அரசியல் ஆசை கிடையாது. ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்தி கொண்ட உதயநிதி ஸ்டாலின், பின்பு அவரே எதிர்பாராத விதமாக 2012 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்கின்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நகைச்சுவை கலந்த கமர்சியல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி மிக பெரிய ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பின்பு தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக எப்படி உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஹீரோவானாரோ, அதே போன்று அவர் சினிமாவில் தனக்கு கிடைத்த பாப்ளிசிட்டியை வைத்து அரசியலிலும் என்ட்ரி கொடுத்தார்.

ஒரு அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலும், மேலும் அவருடைய தந்தை அப்போது திமுகவின் செயல் தலைவர் ஆக இருந்ததாலும், உதயநிதிக்கு அரசியல் என்ட்ரி என்பது மிக எளிதாக அமைந்து விட்டது. சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால் தான் மக்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக அறியப்பட்ட பின்பு தான் முழு நேர அரசியலில் இறங்குவது என்கிற முடிவில், அடுத்தடுத்து தொடர்ந்து சினிமா படங்களிலும் கமிட்டாகி வருகிறார் உதயநிதி. இதுவரை கமர்சியல் மற்றும் காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின். இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் பன்ச் பேசி மக்கள் மத்தியில் தன்னை மாஸ் தலைவனாக நிலைநிறுத்தும் முடிவு செய்துள்ளார்.

அதற்காக எம்ஜிஆர் ஃபார்முலாவை கையில் எடுக்க எடுத்துள்ள உதயநிதி, தன்னுடைய படத்தில் இடம்பெறும் பாடல்களில் அரசியல் குறித்த பாடல் வரிகள், சினிமா காட்சியில் அரசியல் பன்ச் மற்றும் கட்சி சித்தாந்தத்தங்களை பேசுவது என்கிற திட்டத்துடன் தற்பொழுது தான் நடித்து வரும் கழக தலைவன் மற்றும் மாமன்னன் ஆகிய இரண்டு படங்களும் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக எடுக்க பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கழகத்தலைவன் படத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த காட்சிகள் இடம் பெறுவதாக தகவல் வெளியகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான அஜித், விஜய் இருவரையும் ஓவர் டேக் செய்யும் வகையில் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் மாஸ் சீன்கள் இருக்கும், அதை திரையில் பார்க்கும் என்னுடைய கழகத் தொண்டர்களும் ரசிகர்களும் ஆரவாரம் செய்து கொண்டாடும் வகையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர்களிடம் உதயநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று அடுத்தடுத்து உதயநிதி நடிக்கும் படங்களில் அரசியல் பஞ்ச் பேசி தனக்கென ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்த பின்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் அசைக்கமுடியாத அரசியல் தலைவராக உருவெடுக்க எம்ஜிஆர் பார்முலாவை கையில் எடுத்துள்ள உதயநிதி யின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.