நடிகை திரிஷா மற்றும் விஜய் இருவரும் குறித்த கிசுகிசுகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்ட அந்த நிலையில், தற்பொழுது அவர்களை பற்றிய கிசு கிசு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு திரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக தனி விமானத்தில் ரகசியமாக பறந்தது தான்.
மேலும் நடிகர் விஜய்யின் புதிதாக அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தின் மாடியில் தான் திரிஷா புதிதாக வீடு வாங்கி உள்ளதாகவும், இருவரும் அங்கே அடிக்கடி சந்திப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிஷா – விஜய் இருவரும் ஒரு லிஃப்ட் உள்ளே தனியாக இருக்கும் புகைப்படம் வெளியானது.
அந்த லிப்ட் நடிகர் விஜய் இருக்கும் அலுவலகமும் திரிஷா வீடு இருக்கும் அந்த கட்டிடத்தில் தான் உள்ளது என்றும், விஜய் திரிஷா இருவரும் ஜோடியாக அந்த லிப்டில் சென்ற பொது எடுத்த புகைப்படம் தான் அது என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் திரிஷா – விஜய் இருவரும் தனி விமானத்தில் கோவா சென்ற வீடியோவை வெளியானது, ஆனால் அவர்கள் கோவாவில் எந்த ஹோட்டலில் தங்கினார்கள் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் மாப்பிள்ளைடன் இருக்கும் புகைப்படம் தான் வெளியானது, ஆனால் திரிஷா இருக்கும் புகைப்படம் வெளியாகவில்லை, இந்த நிலையில் ஒரு திருமணத்திற்கு சினிமா துறையைச் சேர்ந்த ஒரு நடிகர் செல்கிறார் என்றால் அவர் அவருடைய மனைவியுடன் செல்லுவார், திருமணம் ஆகாத நடிகர், நடிகை என்றால் வருங்கால கணவராக கூடியவர், வருங்கால மனைவியாக கூடிய காதலன் அல்லது காதலியுடன் சொல்வார்கள்.
அப்படி இருக்கையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவுடன் செல்லாமல், திரிஷா உடன் ஜோடியாக தனி விமானத்தில் சென்றது, தற்பொழுது விஜய் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய்மனைவி சங்கீதாவுடன் சில பிரச்சனை காரணமாக பிரிந்து விஜய் சென்னையில் இருக்கிறார்.
அவருடைய மனைவி சங்கீதா குழந்தைகளுடன் லண்டனில் வாழ்ந்து வருகிறார், இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், நடிகர் விஜய்க்கு திருமண வயதில் மகன் மற்றும் மகள் இருப்பதால், இந்த ஒரு காலகட்டத்தில் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அவருடைய இமேஜ் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும், மேலும் அவருடைய அரசியல் வாழ்க்கையை அஸ்தவமாகிவிடும்.
இதனால் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது . அதே நேரத்தில் திரிஷாவுக்கு ஏற்கனவே வருண்மணியன் என்பவர் உடன் நிச்சயமாகி, அந்த திருமணம் பாதியிலே நின்றது, இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் நெருக்கமாக இருப்பதால் விஜயை திரிஷா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.
தற்பொழுது திரிஷா சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து மார்க்கெட் எகிற தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் திரிஷா திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும், மேலும் 40 வயதை கடந்த திரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும், அந்த வகையில் தான் இனி திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக திரிஷா இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திரிஷா விஜய் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் நட்பை தொடர்வார்கள் என்று கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.