தலைகீழாக மாறிய H.வினோத் சினிமா வாழ்க்கை… காக்க வைத்து யோகிபாபுவை கழட்டி விட்டு பரிதாபம்..

0
Follow on Google News

H.வினோத் இயக்கத்தில் தற்பொழுது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான H.வினோத் இயக்கத்தில் வெளியான முதல் படமே ஹிட் அடித்து அவருக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இடம்பெற்ற சண்டை காட்சிகள் H.வினோத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

அதன் பின்பு நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மிக சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய ஹிட்டு அடித்த படம் நேர்கொண்ட பார்வை. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அஜித் நடிக்கும் வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் H.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.

இருந்தாலும் அஜித் மீண்டும் தான் நடிக்கும் துணிவு படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்துக்கு கொடுத்தார், இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது, அடுத்த யோகி பாபு நடிப்பில் ஒரு நகைச்சுவை கலந்த ஒரு படத்தை H.வினோத் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது துணிவு படம் மிகப்பெரிய ஹிட் அடித்து அடுத்தடுத்த மிகப்பெரிய வாய்ப்புகள் H.வினோத்துக்கு குவிந்து வருகிறது.

தனுஷ் மற்றும் கமல்ஹாசன் இருவரில் ஒருவர் படத்தை அடுத்து இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் H.வினோத் ஓகே சொல்லிவிட்டால், தனுஷ் தன்னுடைய மற்ற படங்களை எல்லாம் தற்காலிகமாக நிறுத்திவிட்டு H.வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது.

துணிவு படத்திற்கு பின்பு தன்னுடைய சினிமா வாழ்க்கையே தலைகீழாக மாறிய பின்பு, ஏற்கனவே யோகி பாபு வைத்து நகைச்சுவை கலந்த ஒரு படத்தை இயக்கும் முடிவை H.வினோத் கைவிட்டு விட்டதாகவும், இதனால் H.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறோம் என்று எதிர்பார்த்து காத்திருந்த யோகி பாபுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.