விரைவில் அழகி 2 … கதை இது தான்.! பார்த்திபன் கொடுத்த இன்ப அதிர்ச்சி…

0
Follow on Google News

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிகர் பார்த்திபன், நடிகைகள் தேவையணி, நந்திதாதாஸு நடிப்பில் இசைஞானி இளையராஜா இயக்கத்தில் உருவான படம் அழகி. இந்த படம் கடும் போராட்டத்துக்கு பின்பு திரையரங்கில் வெளியானது. படம் வெளியான முதல் ஒரு வாரம் படத்தை காண யாரும் வராத நிலையில் பல்வேறு திரையரங்கில் அழகி படத்துக்கு பதில் அப்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ரெட் படம் திரையிடப்பட்டது.

ஆனால் அழகி படம் வெளியாகி பத்து நாட்களுக்கு பிறகு படம் பார்த்தவர்களை பகிர்ந்து கொண்ட படத்தின் சுவாரசியத்தை அறிந்து அழகி படத்தின் திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் பின்பு மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி தமிழக முழுவதும் உள்ள பல திரையரங்கில் சக்கை போடு போட்டது அழகி. பல திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்து மக்களில் பாராட்டையும் பெற்றது தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளியான அழகி.

அழகி படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில். அந்த படத்தின் நடிகர் பார்த்திபன் தனக்குரிய பாணியில் படத்தின் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில். அழகி age 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா,தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க… அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க,அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா கவிமனது!) எப்டி^ Bracket ^ பண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்!

சரி matterக்கு வருவோம்… அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே சேரும்.
அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம்,ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல்.எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு ‘அழகி’!

தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட இன்னொரு காரணம் இசை alias இளையராஜா.நந்திதாதாஸும் நந்தியாக தேவையானியும் தேவையா நீ என்றளவில் நானும் (கையாலாகா காதலன்-காதலை தவிர காதலியை காப்பாற்ற ஏதுமற்றவன்) வாழ்ந்திருப்போம். சண்முகத்தின் part 1, part 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால்,Part 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் திரு தங்கர்.ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2 ! அண்ணன் அவர்களுக்கு நன்றிகள்!! என அழகி பார்ட் 2 குறித்து சுசமாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

அறிவாலயம் பக்கமே வர கூடாது.. சுந்தரவல்லி விரட்டியடிப்பா. கதறும் பிரசன்னா கண்டுகொள்ளாத திமுக ..