இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பின்பு தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார் பா. ரஞ்சித். எத்தனையோ இயக்குனர்கள் ரஜினிகாந்த் கால் சீட்காக காத்திருக்க. ஆனால், தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை வைத்து இரண்டு படங்களை இயக்கி, கபாலி படத்தில் கெத்தா அப்படி தாண்ட கால் மேல் கால் போட்டு உட்காருவேண்டா என்கிற வசனத்தை போன்று கெத்து காட்டினார் பா.ரஞ்சித்.
ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு படங்களை இயக்கிய பின்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு ரவுண்ட் வருவார் பா.ரஞ்சித் என பலர் எதிர்பார்த்த நிலையில், பா.ரஞ்சித் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் யாரும் முன் வரவில்லை. மேலும் ரஞ்சித் படத்தில் பணியற்றிய நடிகர் நடிகைகளுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதற்கு காரணம் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட சாதி முத்திரை தான் என்று கூறப்படுகிறது.
அதற்கேற்ப தொடர்ந்து பொது மேடைகளில் சாதி குறித்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினரை சீண்டுவது போன்று பேசி வந்தார் பா.ரஞ்சித். இது தான் அவர் படத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் பலர் நடிப்பதர்க்கு தயக்கம் காட்டி வந்தனர். இதனால் ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்கள் இயக்கி இருந்தாலும், அடுத்து அவர் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படம் மட்டுமே வெளியானது.
இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜா பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது, ஆனால் அந்த படத்தில் இருந்து இளையராஜா வெளியாகிவிட்டார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் சாதி பட இயக்குனர்களான பா.ரஞ்சித், முத்தையா, மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் படத்தில் பணியாற்றுவதில்லை என்கிற ஒரு முடிவில் ஏ.ஆர்.ரகுமான் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தனது படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியுள்ளார் பா.ரஞ்சித் என்றும் ஆனால், அதற்கு ஏ.ஆர்.ரகுமான் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க கேட்க அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், ஆனால் உதயநிதி வற்புறுத்தலின் பேரில் தான் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.