இந்த நடிகையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்… தனுஷா நோ..நோ… ஓட்டம் எடுத்த மூன்றாவது நடிகை.!

0
Follow on Google News

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ப்ரியங்கா அருள்மோகன். இவரை சமீபத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படக்குழு கால்ஷீட் கேட்டு அணுகியது. அதற்க்கு அவர் நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை டைரக்ட் செய்யவிருப்பவர் அருண் மாதேஸ்வரன். ராக்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்து அனைவரயும் திரும்பி பார்க்க வைத்தார். தனது அடுத்த திரைப்படமான சாணி காயிதத்தில் கீர்த்திசுரேஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியை திரையில் மிக வித்தியாசமாக காண்பித்து தனது அடையாளத்தை பலப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் அவர் நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்ற தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்க ப்ரியங்கா மறுத்ததால் உப்பேனா எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்து அனைவரையும் அசத்திய புல்லட் சாங் புகழ் கீர்த்தி ஷெட்டியை படக்குழு அணுகியுள்ளது.

தற்போது கீர்த்தி ஷெட்டி இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் நோ சொல்லியிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் கீர்த்தி ஷெட்டியை விஜய் சேதுபதி படத்தில்நடிக்க வைக்க முயன்றபோது மகளாக நடித்தவருடன் எப்படி ஜோடி சேர்வது என அவர் மறுத்துவிட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் யாரை நடிக்கவைக்கலாம் என தனுஷ் அண்ட் கோ குழம்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தா அல்லது அமலா பாலை ஜோடியாக்கலாமா என இயக்குனர் தரப்பு யோசித்து வருவதாக செய்திகள் தெரிவிகின்றன.

திருமணத்தை வியாபாரம் செய்த நயன்தார – விக்னேஷ் சிவன்.. அட..கடவுளே.. என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.?