தன்னை விஜய், அஜித் என நினைத்து ஓவர் ஆட்டம்… நடு தெருவில் நிற்கும் சந்தானம்…அய்யோ பாவம்..

0
Follow on Google News

சினிமாவில் தனக்கு என்ன வருகிறதோ.? தனக்கு எதில் திறமை இருக்கிறதோ.? தன்னை எந்த வகையில் ரசிகர்கள் ரசிகிரார்களோ.? அந்த பார்முலாவை சரியாக தெரிந்து கொண்டு அதன்படி தங்களுடைய உழைப்பை போட்டால் மட்டுமே சினிமாவில் வெற்றி அடைய முடியும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக இருந்த இயக்குனர் பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற பெரும் இயக்குனர்கள் பல நடிகர்களை இந்த தமிழ் சினிமாவில் உருவாக்கி இருந்தாலும் கூ, தங்களுடைய மகனை இந்த சினிமாவில் ஒரு ஹீரோவாக நிலை நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில் எதார்த்தமாக யாரும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமாவிற்கு வரக்கூடியவர்ககள் சிலருக்கு ஜாக்பாட் அடித்தது போன்று ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதையாக கிடுகிடுவென உச்சத்திற்கு செல்வார்கள் அந்த வகையில் நடிகர் சூரி பல வருடங்கள் கடின உழைப்பை போட்டு ஒரு காமெடி நடிகராகவோ அல்லது ஒரு குணச்சித்திர நடிகனாகவோ சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்று போராடி வந்தாலும் கூட, பரோட்டா காமெடி மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா கதையாக மிகப்பெரிய காமெடி நடிகராக உருவெடுத்தார் நடிகர் சூரி.

அதோ போன்று நடிகர் சந்தானமும் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று நடிகர் சிம்புவால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெரிய பிசி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். பொதுவாகவே காமெடி நடிகர்களில் சூரி மற்றும் சந்தானத்தை ஒப்பிடும்பொழுது சந்தானம் காமெடிக்கு ரசிகர்கள் மிக அதிகம். குறிப்பாக சந்தானம் காமெடியனாக நடித்த படங்கள் ஹீரோவுக்காக வெற்றி அடைந்ததை விட அவருடைய காமெடிக்காகவே வெற்றி அடைந்தது ஏராளம்.

ஆனால் சூரியின் காமெடி ஒரு படத்தின் வெற்றி அடையும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சி இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் ஹீரோ ஆகிவிட்டார் என்பதற்காக, நாமும் ஏன் ஹீரோவாக கூடாது என முயற்சி எடுத்த சந்தானதம் ஹீரோவாக நடித்த முதல் படம் வெற்றியை கொடுத்தாலும், அடுத்தடுத்து தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியை தழுவியது.

ஆசைக்கு ஒரு படம் ஹீரோவாக நடித்துவிட்டு பின்பு தன்னுடைய சரிவை உணர்ந்து மீண்டும் அவர் காமெடிக்கு திரும்பியிருந்தால், அவருக்கான சினிமாவில் அவருக்கான வரவேற்பும், உயரமும் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கும். மேலும் காலம் கடந்தும் இன்று எப்படி கவுண்டமணி நகைச்சுவை மன்னனாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறாரோ அதேபோன்று சந்தானத்துக்கும் ஒரு இடம் மக்கள் மத்தியில் இருந்திருக்கும்.

ஆனால் நான் இனி காமெடியனாக நடிக்க மாட்டேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் அடம்பிடித்ததின் விளைவு இன்று ஹீரோவாகவும் இல்லாமல் காமெடியனாகவும் இல்லாமல் மிகப் பெரிய சரிவை சினிமாவில் சந்தித்திருக்கிறார். சந்தானம் படத்திற்கான வரவேற்பும் கூட மக்கள் மனதில் பெரிதாக இல்லை.

இந்த நிலையில் காமெடியனாக இருந்து ஹீரோவாக வெற்றி அடைந்த நடிகர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே. அந்த வரிசையில் தற்பொழுது சூரி இடம் பிடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு காரணம் சூரி நடித்த காமெடி வேடங்கள் மிகப்பெரிய அளவில் மக்களை சிரிக்க வைக்கவில்லை. ஆனால் அவர் ஹீரோவாக நடித்த விடுதலை படம் அவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

அந்த வகையில் மேலும் சூரியை வைத்து படம் எடுப்பதற்கு அமீர், வெற்றிமாறன், சசிகுமார் போன்ற இன்னும் பல படைப்பாளிகள் தயாராக இருக்கிறார்கள். அதே நேரத்தில் சூரி ஹீரோவாக ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமும் அவருடைய தோற்றத்திற்கும் அவருடைய நடிப்பிற்கும் ஏற்புடையதாக இருக்கிறது. அந்த வகையில் சந்தானமும் காமெடி கலந்த அவருடைய தோற்றத்திற்கு ஏற்றார் போன்று கதையை தேர்வு செய்து ஹீரோவாக நடித்திருந்தால் அவருடைய படம் தொடர்ந்து வெற்றியை கொடுத்திருக்கலாம்,

அல்லது தன்னை மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை காமெடியனாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள் என்பதை உணர்ந்து மீண்டும் காமெடிக்கே திரும்பி இருந்தாலும் இன்று காமெடி நடிகராக மிகப்பெரிய உச்சத்தில் இருந்திருப்பார் சந்தானம். ஆனால் ஹீரோவாக நடித்த ஒன்று இரண்டு படங்கள் வெற்றியடைந்த பின்பு தன்னை அஜித், விஜய் ரேஞ்சுக்கு சந்தானம் நினைத்ததின் விளைவு இன்று சினிமாவில் எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here