மலையாள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மெட்டிஒலி சீரியல் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர். தமிழில் பல சீரியல்களில் நடித்து வரும் சாந்தி வில்லியம்ஸ். சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மலையாள சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கின்ற குற்றச்சாட்டு குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமாவில் ஹேமா அறிக்கை குறித்து மிகப் பெரிய சர்ச்சை அந்த சினிமா வட்டாரத்தில் வெடித்துள்ளது. குறிப்பாக டாப் 5 நடிகர்கள் உட்பட்ட முக்கிய இயக்குனர்கள் டெக்னீசியன் என மொத்தம் 15 பேர்கள் மிகப்பெரிய அட்ராசிட்டியில் மலையாள சினிமாவில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக நடிகைகளை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மென்ட் அழைத்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மலையாள சினிமா சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்த பரபரப்பு குறித்து பேசிய சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மலையாள சினிமா துறையை பற்றி பேசவே எனக்கு விருப்பமில்லை என தெரிவித்தவர் மேலும் அந்த சினிமா துறையில் யார் பெரியவர் என்கின்ற மிகப்பெரிய அரசியல் உள்ளது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தான் மலையாள சினிமாவில் உள்ளது என தெரிவித்த சாந்தி வில்லியம்ஸ்.
ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண் சினிமா ஆசையில் நகரத்திற்கு வருகிறார் என்றால் அந்த பெண்ணின் குடும்ப பின்னணி என்ன என்று யாருக்கும் தெரியாது. அந்த பெண்ணை நம்பி எத்தனை உயிர் அவர் குடும்பத்தில் இருக்கும். அவர் சம்பாதித்து அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தானே அந்தப் பெண் துணிந்து அவர் வீட்டை விட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என்று வருகிறார்.
ஆனால் இதையெல்லாம் செய்தால்தான் சினிமாவில் வாய்ப்பு என்றால் அந்தப் பெண் வேறு வழியில்லாமல் வாழ்ந்து ஆகணுமே என்கின்ற ஒரு காரணத்திற்காக தான் இது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள், மேலும் மலையாள சினிமாவில் 60 வயசு கிழவியானாலும் சரி ஏன் 90 வயசு கிழவியானாலும் இரவில் வந்து கதவை தட்டி தொல்லை செய்கின்ற பழக்கம் கொண்டவர்கள் தான் மலையாள சினிமா துறையில் இருக்கிறார்கள்.
அதனால் எனக்கு சுத்தமாக மலையாள சினிமாவே பிடிக்கவில்லை என தெரிவித்த சாந்தி வில்லியம்ஸ். ஆனால் தமிழ் சினிமாவில் பல படங்கள் நான் நடித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட இங்கே உள்ளவர்கள் இரவில் வந்து கதவை தட்டுவதோ அல்லது தவறாக பேசுவது என்று ஒரு போதும் எனக்கு அப்படி ஒரு தொந்தரவை கொடுத்ததே கிடையாது, அந்த வகையில் தமிழ் சினிமா துறையும் தெலுங்கு சினிமா துறையும் கையெடுத்து கும்பிடுகிறேன்.
காரணம் தமிழ் தெலுங்கு சினிமா துறையில் இருக்கின்றவர்கள் உணர்வுகளுக்கு புரிந்து வயதுக்கு மரியாதை தரக்கூடியவர்கள் அப்படி அதையும் மீறி நடக்கிறது என்றால் அது அது வேறு ஒரு பிரச்சனை என தெரிவித்த சாந்தி வில்லியம்ஸ்.அதே நேரத்தில் பல சினிமா துறையைச் சார்ந்தவர்கள் தாங்களுக்கு பல பிரச்சினைகளை சந்தித்தோம் என்று பொது வெளியில் சொல்கிறார்கள்.
உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றால் நேரடி சொல்லிவிட்டு போய்விடுங்கள். எதற்காக பொது இடங்களில் இதைப் பற்றி பேச வேண்டும். இப்படி சொல்லக்கூடிய பெண்கள் பலர் இந்த சினிமா துறையில் காணாமல் போய்விட்டார்கள். காரணம் அவர்களுக்கு யாரும் கொடுக்க மாட்டார்கள் என சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.