இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது வாழ்க்கையில் மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரின் வாழ்க்கையில் நடந்த யாரும் அறியாத அவர் வாழ்க்கையில் நடந்த மறுபக்கத்தை தான் தற்போது பார்க்க போகிறோம், தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே வெற்றி நடை போட்டு வந்த ஜெயலலிதா சினிமா துறையில் உச்சத்தில் இருந்த போதே சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
ஜெயலலிதா வாழ்க்கையில் சினிமா, அரசியல் என அவரின் சாதனைக்கு பின்னால் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர். ஆனால் ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு,எம்ஜிஆர் உடன் கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் அவரிடம் இருந்து பிரிந்த ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவை காதலிக்க தொடங்கினர், சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதை தெரிந்தே அவரை காதலிக்க, சோபன் பாபுவும் ஜெயலலிதாவை காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா – சோபன் பாபு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர், இது குறித்து ஒரு வர இதழுக்கு பேட்டி கொடுத்த ஜெயலலிதா சுமார் 7 ஆண்டுகள் சோபன் பாபுவும் நானும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தோம் என அவரே சோபன் பாபுவை விட்டு பிரிந்த பின்பு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்போது சோபன் பாபு உடன் ஒரே வீட்டில் ஜெயலலிதா இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் என ஒரு குடும்ப தலைவனான சோபன் பாபு உடன் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டு கெதர் வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார் ஜெயலலிதா, ஒரு கட்டத்தில் தனது மனைவி, குழந்தைகள் என நினைப்பே இல்லாமல் ஜெயலலிதாவே சரணம் என போயஸ் கார்டன் வீட்டிலே செட்டிலாகியுள்ளார் சோபன் பாபு.
இது சோபன் பாபு வீட்டில் பெரும் பிரச்சனையாக வெடிக்க தொடங்கியது, இதனை தொடர்ந்து சோபன் பாபுவின் 20 வயது மகன் நேரடியாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று, அங்கே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தந்தையை மயக்கி எங்கள் நினைப்பே இலலாமல் செய்துவிட்டதாக ஜெயலலிதாவை கடுமையாக சாடியுள்ளார் சோபன் பாபு மகன், ஒரு கட்டத்தில் சோபன் பாபு குடும்ப சூழல் காரணமாக ஜெயலலிதா- சோபன் பாபு ஜோடி பிரிந்தது.
ஆனால் இந்த பிரிவை தாங்கி கொள்ள முடியாத ஜெயலலிதா, மேலும் சோபன் பாபு மகன் தன்னை கடுமையாக திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயலலிதா தற்கொலை செய்து கொண்டு அதில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளார், இதே போன்று தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு பிரட்சனை காரணமாக மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டதாக சினிமா துறையை சேர்ந்த பிரபலம் ஒருவர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.