விடுதலை படத்தில் மிக முக்கியமான காட்சியாக ரயில் விபத்தை காட்சிகள் இருக்கிறது. மற்ற படத்தில் பல ரயில் விபத்து காட்சிகளிடம் பெற்றிருக்கும். ஆனால் மற்ற படத்தில் காட்டப்பட்ட காட்சிகளை விட விடுதலை படத்தில் காட்டப்பட்ட ரயில் விபத்து காட்சி பிரமிக்க வைக்கிறது பார்ப்பவர்களை. அந்த வகையில் இந்த ரயில் விபத்து இந்த படத்திற்கு கதைக்கு எப்படி உதவுகிறது.
இந்த படத்தின் கதையில் நிகழும் புரட்சிக்கு எப்படி உதவுகிறது என்பதை நிச்சயம் படம் பார்ப்பவர்களுக்கு அந்த ரயில் விபத்து காட்சியின் முக்கியத்துவம் தெரியும். விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி இவர்களின் நடிப்பை தாண்டும் அளவிற்கு கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிப்பு உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் சின்னப் பையன் இப்படி சண்டை போடுகிறாரா.? என்று ஆச்சரியப்படும் வகையில் கென் கர்ணாஸ் சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு எப்படி வெற்றிமாறன் மிக முக்கிய காரணமோ,அதே போன்று இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழக்கூடியவர்களில் இருவர், அதில் ஒருவர் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் என்ன எதிர்பார்க்கிறாரோ.? அதை காட்சியாக தன்னுடைய கேமரா மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
விடுதலை பார்ட் ஒன்றும் சரி பார்ட் 2வும் சரி படம் பார்ப்பவர்களை காட்டுக்குள் பயனம் செய்கின்ற ஒரு உணர்வை ஏற்படுத்து வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. ஒரு சில ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே அந்த படத்தின் கதையோடு பயணிக்க கூடியவர்கள். அதாவது அந்த கதைக்கு என்ன தேவையோ.? அதை அளவோடு தன்னுடைய ஒளிப்பதிவில் காட்டி, அந்த கதையோடு பயணிக்க கூடிய ஒரு சில ஒளிப்பதிவாளர்களில் வேல்ராஜ் ஒருவர் என்பதை, இந்த விடுதலை படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் விடுதலை படத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுவதை விட, இந்த படத்தின் வெற்றிக்கு எப்படி வெற்றிமாறனின் திரைக்கதை ஒரு காரணமோ, அதே போன்று அந்தப் படத்தின் கதையோடு காட்சிப்படுத்திய ஒலிப்பதிவாளர் வேல்ராஜும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. அதே எப்படி வேல்ராஜ் தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் இந்த படத்தின் வெற்றி க்கு ஒரு காரணமாக இருந்தாரோ.?
அதேபோன்று இசைஞானி இளையராஜாவின் இசை சொல்லவே வேண்டாம். தன்னுடைய இசையால் விடுதலைக்கு உயிரூட்டி இருக்கிறார் இளையராஜா. வெற்றிமாறன் இந்தப் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை மிக எளிதாக மக்கள் புரியும் வகையில் தன்னுடைய இசை மூலம் மெருகேற்றி இருக்கிறார் இளையராஜா. அந்த வகையில் விடுதலை படத்திற்கு வேறு எந்த ஒரு இசையமைப்பாளரை போட்டிருந்தாலும் இந்த அளவிற்கு இசையின் வரவேற்பை பெற்றிருக்க முடியாது.
அந்த வகையில் விடுதலை வெற்றிக்கு எப்படி வெற்றிமாறன் ஒரு காரணமோ, அதே போன்று மற்ற இருவர்களில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசைஞானி இளையராஜா இருவரும் மிக முக்கிய பங்காற்றி உள்ளார்கள் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.