GOAT யை தூக்கி சாப்பிட்ட ரப்பர் பந்து… தினேஷிடம் மண்ணை கவ்விய விஜய்.. வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் தமிழகத்தை பொறுத்த வரை முக்கி முக்கி 220 கோடி வசூலை தொட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கோட் திரைப்படம் வெளியானது முதல் தொடர்ந்து எதிர் மறை விமர்சனம் அதிகளவில் இருந்து வந்தது. மேலும் குறிப்பாக திரையரங்கு வட்டாரத்திலும் கோட் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் அதிகளவில் இருந்து வந்தது.

இதுகுறித்து திரையரங்கு வட்டாரத்தில் விசாரித்ததில், தமிழ்கத்தில் கோட் திரைப்படத்தை வெளியிட்ட நபர் திரையரங்குகளுக்கு வெறும் 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்து, 80 – 20 என்கிற கணக்கில் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். இது திரையரங்கு வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது, இதுவே இந்த படத்தின் படு தோல்விக்கு காரணமாகி விட்டது. ஏன்னென்றால் படத்திற்கு ஆடியன்ஸ் குறைவாக வந்தாலும், அதிக சதவிகிதம் ஷேர் திரையரங்குகளுக்கு கொடுத்து இருந்தால் தாக்கு பிடித்து இருந்து இருப்பார்கள்.

ஆனால் வெறும் 20 சதவிகிதம் என்பதால், கரண் பில் கூட தேறவில்லை என்றும் சொல்லும் அளவுக்கு ஆடியன்ஸ் வந்ததின் விளைவு கோட் படம் வந்த வேகத்தில் திரையரங்குகளில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது கோட் திரைப்படத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரப்பர் பந்து மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த வருடம் வெளியான படங்களிலே இதுவரை ரப்பர் பபந்து தான் மிக சிறப்பான படம் என்கின்ற அளவிற்கு பெயர் பெற்றுள்ளது.

கோட் திரைப்படத்தில் விஜயகாந்த் ஏ ஒன் டெக்னாலஜி மூலம் ஒரு சில வினாடிகள் மட்டுமே காண்பித்து விட்டு இது விஜயகாந்துக்கு சமர்ப்பணம் என்கின்ற அளவிற்கு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் கோட் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தம்பட்டம் அடித்தது கோட் பட குழுவினர். ஆனால் உண்மையிலேயே விஜயகாந்த்க்கு சமர்ப்பணம் என்றால் அது ரப்பர் பந்து தான் ரப்பர் பந்துவின் படத்தின் கதாநாயகன் விஜயகாந்த் ரசிகராகவே வருகிறார்.

குறிப்பாக அந்த படத்தின் இயக்குனர் விஜயகாந்த் ரசிகர் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மிக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ரப்பர் பந்து மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் வெளியான அதே தேதியில் ரப்பர் பந்து ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தால், கோட் படம் தற்பொழுது பெற்ற வசூலை கூட பெற்று இருக்காது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

அந்த வகையில் விஜய் உடன் மோதுவதற்கு அஜித் – ரஜினி தேவையில்லை இனி அட்டகத்தி தினேஷ் போதும் என்கிற அளவுக்கு கோட் படம் வெளியான அதே தேதியில் ரப்பர் பந்து ரிலீஸாகி இருந்தால், அட்டகத்தி தினேஷ் உடன் மோதி விஜய் மண்ணை கவ்வினார் என செய்தி வெளியாகி இருக்கும் , அந்த வகையில் ரப்பர் பந்து குழுவினர் படத்தை கோட் படம் ரிலீஸ் ஆன் தேதியில் ரிலீஸ் செய்யாததால் விஜய் மானம் காப்பாற்ற பட்டு விட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரப்பர் பந்து வெற்றி, வாழை வெற்றி என சிறிய பட்ஜெட் படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று வரும் நிலையில், மிக பெரிய பட்ஜெட்டில் வெளியான கோட் படம் தோல்விக்கு காரணம், இனி தனி ஒரு நடிகருக்காக படம் ஓடாது, கதை நன்றாக இருந்தால் பொதுவான ஆடியன்ஸ் படத்தை பார்த்து வெற்றி பெற வைப்பார்கள் என்கிற பாடத்தை உணர்த்தியுள்ளது ரப்பர் பந்து படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here