என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய அந்த நாள்.! புகைப்படத்துடன் அந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட திரிஷா.!

0
Follow on Google News

திரிஷா, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு புகழ் பெற்ற முன்னனி நடிகையாக பணியாற்றி பிரபலமானவர். இவர் திரைப்படங்களை தொடர்ந்து மாடெல்லிங் துறையிலும் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். மாடலிங் துறையில் பணியாற்றி “மிஸ்.மெட்ராஸ்” என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார். இந்த பட்டத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பினை பெற்று தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக உள்ளார்.

1999-ஆம் ஆண்டு “மிஸ் மெட்ராஸ்” பட்டத்தினை வென்ற இவர், 2001-ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற “மிஸ் இந்திய” போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளார். 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஒரு துணை நடிகராக இருந்த திரிஷா, இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த திரைப்படங்கள் தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ஒரு முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.திரிஷா, தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார். இவர் சரளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் பேசும் வல்லமை பெற்றதால் எளிதாக தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் 30-9-1999 தேதியை குறிப்பிட்டு அன்றைய தேதியில் “மிஸ் மெட்ராஸ்” பட்டம் வாங்கிய புகைப்படத்தை பதிவு செய்து, இந்த நாள் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நாள் என தனது அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் த்ரிஷா, இதற்கு த்ரிஷாவின் முன்னால் காதலன் என கிசு கிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர் ராணா இந்த டிவீட்டர் பதிவுக்கு லைக் செய்துள்ளார் மற்றும் திரிஷா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.