விஜயகாந்தை தொடர்ந்து இழிவு படுத்தும் நடிகர் சங்கம்… இனி நீங்க நடிச்ச படம் வரட்டும்..

0
Follow on Google News

சமீபத்தில் நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டம் மிக உன்னிப்பாக கவனிக்க பட்ட நிலையில, விஜயகாந்த் மறைந்த போதுஇறுதி அஞ்சலி செலுத்துவதில் நடிகர் சங்கமும், சினிமா நடிகர் நடிகைகளும் எப்படி உதாசீனப்படுத்தினார்களோ அதே போன்ற நிகழ்வுதான் சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது.

இதில் விஜயகாந்த் மரணம் அடைந்தபோது பலரும் வெளிநாடுகளில் இருந்ததால் திடீரென்று வர முடியவில்லை என சாக்குப் போக்கு சொன்னவர்கள், தற்பொழுது முன்கூட்டியே 19ஆம் தேதி விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தும், முன்னணி நடிகரான அஜித் நடிகர் தனுஷ் போன்ற பலர் நடிகர்கள் வராமல் விஜயகாந்தை உதாசீனப்படுத்தி விட்டார்கள்.

இந்த நிலையில் இதுவரை தமிழ் சினிமா துறையினரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்த தமிழக மக்கள் தற்பொழுது அவர்களுக்கு எதிராக திரும்பி உள்ளனர், அதாவது விஜயகாந்த் மண்ணில் புதைக்கப்பட்ட போதே தமிழ் சினிமாவும் தமிழக மக்களால் புதைக்கப்பட்டு விட்டது என்பதை தற்போது தமிழக மக்களுக்கு சினிமா மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த்க்கு நடந்த இரங்கல் கூட்டம் மிக விமர்சியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு புகைப்படத்துக்கு மலர் தூவியதோடு முடித்துக் கொண்டது நடிகர் சங்கம். இது ஏதோ கடமைக்கு செய்ய வேண்டும் என்று செய்தது போல் அந்த நிகழ்வு இருந்தது. தெலுங்கு சினிமாவில் விஜயகாந்த் அளவுக்கு அரசியலிலும், சினிமாவிலும், மக்கள் மத்தியிலும் புகழ்பெற்ற ஒரு நடிகர் இறந்துவிட்டால், இதுபோன்று சாதாரணமாக அங்கே ஒரு இரங்கல் கூட்டம் நடந்து விடுமா என்கின்ற கொந்தளிப்பும் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு செல்வாக்கு மிக்க தலைவர் மட்டுமின்றி குறிப்பாக நடிகர் சங்கத்தையே காப்பாற்றிய ஒரு மாமனிதனுக்கு எந்த அளவுக்கு மரியாதை செய்யவேண்டும் என்ற பண்பும் கூட மற்ற சினிமாக்களில் பிற மாநிலத்தில் இருக்கும் நடிகர்களிடம் இருக்கும் கடமை தமிழ் சினிமா துறையினரும் மத்தியில் சிறிதும் இல்லை என்பது விஜயகாந்த் மரணத்தில் அம்பலமாகியுள்ளது.

ஆனால் ஒவ்வொரு நடிகரும் வாயால் வடை சுடுவது எப்படி என்று கேட்டால் அருமையாக செய்வார்கள், விஜயகாந்த் சமாதியில் வந்து அழுவதும், வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவிப்பது என்று மக்களை ஏமாற்றும் போர்ஜரி வேலை இனி நடைபெறாது என்பது தற்பொழுது விஜயகாந்த் விஷயத்தில் தமிழக மக்களின் கோபத்தின் வெளிப்பாடு உணர்த்துகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கையில், நிச்சயம் அந்த கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட மாட்டார்கள் இந்த நடிகர்கள் என அவர்கள் நடவடிக்கை மூலம் கணிக்க முடிகிறது. அதாவது நடிகர் சங்கத்தின் மொத்த கட்டிடத்திற்கும் விஜயகாந்த் பெயரை சூட்டாமல், ஏதோ ஒரு அறைக்கோ அல்லது அங்கே இருக்கும் ஒரு மண்டபத்திற்கோ விஜயகாந்த் பெயரை சூட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.அதுவும் நடப்பது கூட சந்தேகம்தான்.

இந்த நிலையில் விஜயகாந்தை உதாசீன படுத்திய நடிகர் சங்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பில் இருக்கும் இந்த சூழலில், நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியா உள்ளது. காரணம் நடிகர் சங்கம் கட்டுவதற்காகவும் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி அல்லது வேறு எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தி மக்கள் மத்தியில் வசூலித்து விடலாம் என்கிற திட்டத்துடன் நடிகர் சங்கம் வந்தால் நிச்சயம் உலக தமிழர்கள் அவர்களை புறக்கணிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த வகையில் பாதி கட்டிடதுடன் நிற்கும் நடிகர் சங்கம் கட்டிடம் இதற்கு மேல் கட்டப்படுமா என்பது சந்தேகம், இந்த நிலையில் விஜயகாந்த் மண்ணுக்குள் புதைந்த போதே, நன்றி கெட்ட தமிழ் சினிமா திரையுலகத்தை தமிழக மக்கள் மண்ணுக்குள் புதைத்து அடக்கம் செய்து விட்டார்கள் என்பதே இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சரிவின் மூலம் வெளிப்படும் என்கின்றனர் விஜயகாந்தை இன்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழக மக்கள்.