கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்பொழுது அவருடைய மற்றொரு சகோதரரான சிவராஜ் குமார் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது எப்படி தன்னுடைய தந்தை ராஜ்குமார் தன்னுடைய சகோதரர் புனித் ராஜ்குமார் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்களோ அதே போன்று சிவராஜ்குமார் கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
தமிழில் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்தார், மேலும் தனுசுடன் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் நடித்திருந்தார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களே சிவராஜ்குமார் வந்திருந்தாலும் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் வேற லெவல் இருக்கும் இந்த நிலையில் ஈட்டி படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் புதிதாக ஒரு தமிழ் படத்தில் சிவராஜ் குமார் கமிட்டாகி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்து இதுவரை தான் ஒப்பந்தமாகி இருந்த அத்தனை படத்தில் இருந்தும் விலகியுள்ளார். மேலும் தான் கமிட்டாகி இருந்த படத்தின் இயக்குனரிடம் வேறு ஒரு நடிகரை வைத்து நீங்கள் அந்த படத்தை எடுத்துக்குங்க எனக்காக காத்திருக்க வேண்டாம், நான் சிகிச்சை முடிந்து வருவதற்கு நாட்கள் அதிகமாகலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக தான் கமிடாகி இருந்த ரவி அரசு படத்தில் எனக்கு பதில் தனுஷ் நடிப்பதற்கு நான் தனுஷிடம் பேசவா என்றும் கேட்டிருக்கிறார் சிவராஜ் குமார். இந்த நிலையில் தற்பொழுது புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் சிவராஜ் இருப்பதால் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் விரைவில் அவர் குணம் அடைந்து விடுவார் என அவர் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் மறைந்த பின்பு அவருடைய சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுத்த போது தன்னுடைய அப்பா சொத்தில் தனக்கு வந்த பங்குகள் அத்தனையும் அனாதை இல்லங்களுக்கு மற்றும் பல அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்தவர் தான் தற்பொழுது புற்றுநோயால்பாதிக்கப்பட்டுள்ள சிவராஜ் குமார்.
அதாவது தான் சம்பாதித்த பணமே அதிகமாக இருக்கிறது இதுவே எனக்கு போதும் தன்னுடைய தந்தை சொத்தில் உள்ள எனது பங்கை முழுவதுமாக ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் அறக்கட்டளைக்கு எழுதி வைக்கிறேன் என்று எழுதி வைத்த வள்ளல் தான் இந்த சிவராஜ் குமார். தற்பொழுது அவருக்கு புற்றுநோய் உள்ள நிலையில் அவர் இது குறித்து தெரிவிக்கையில், தனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்தவர்.
அதற்காக தான் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதையும் மேலும் அந்த நோய் புற்று நோய் அல்ல ஆனால் அது என்ன நோய் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் புற்றுநோய் என பதட்டம் அடை வேண்டாம் நான் நலமுடன் இந்தியா திரும்புவேன் என்று தெரிவித்திருக்கிறார் சிவராஜ் குமார். அந்த வகையில் நீங்களும் கமெண்டில் சிவராஜ் குமார் நலன் பெற்று இந்தியா திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து இறைவனை பிராத்தித்து கமெண்ட் செய்யுங்கள்.