பிக் பாஸ் சீசன் 7… போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி தொடங்கும் போது அதற்கு அதிகமான நெகட்டிவ் கருத்துகள் வந்தது. அது எப்படி ஒரு பிரபலங்களால் 100 நாட்கள் சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்க முடியும். அதுவும் அவர்களால் போன் இன்டர்நெட் என்று எந்த ஒரு இணையதள வசதிகளையும் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

பிறகு இதெல்லாம் ஸ்க்ரிப்ட் என்று கூறி வந்தனர். டிஆர்பி-காக தங்களுக்குத் தேவையான ஆட்களை உள்ளே வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்றெல்லாம் கருத்துக்கள் பரவி வந்தனர். அதே நேரத்தில் தங்களுக்கு பழக்கமான பல பிரபலங்கள் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக அதிகமான ரசிகர்கள் ஆர்வம் காட்டிக்கொண்டும் இருந்தனர்.

இதனாலையே பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்தது. முதல் சீசனில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வரைக்கும் ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. அது மட்டும் இன்றி கடந்த சீசன் வெற்றியாளர் தேர்வு பற்றி பல சர்ச்சைகள் சென்றது. ஆனால் எதிர்பார்க்காத வரவேற்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்தது.

அதற்கு மிக முக்கிய காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் தான். என்றும் புதுமையை விரும்பும் உலகநாயகன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதே நேரம் வேறு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் பல சீசன்களை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில வாரங்களுக்குள் அதாவது செப்டம்பர் முதலில் அல்லது இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சர்ச்சைக்குரிய பல போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியலை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் வெளியிட்டு வருகின்றனர்.

ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பயில்வான் ரங்கநாதன், பெண் பஸ் ஓட்டுநர் சர்மிளா ஆகியோரின் பெயர்கள் இதுவரை கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தனது தனித்துவமான குரலால் மிகவும் பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு முறையும் விஜய் டிவி ப்ராடக்ட்ஸ் என்று விஜய் டிவியில் வேலை பார்க்கும் சிலரும் உள்ளே செல்வர். அந்த வழியில் இப்போது விஜய் டிவியில் கதாநாயகியாக நடிக்கும் நான்கு ஹீரோயின்சை தேர்வு செய்துள்ளனர் என்று தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியின் தொகுப்பாளினியும் தேன்மொழி பிஏ பிஎல் என்ற சீரியலின் கதாநாயகிமான ஜாக்குலின் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்.

அதே போலவே தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி கேரக்டரில் நடிக்கும் கதாநாயகி நட்சத்திரா பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். இவர்கள் மட்டுமல்ல பாரதி கண்ணம்மா சீரியலில் தன்னுடைய உச்சகட்ட வில்லத்தனத்தை காட்டிய வெண்பா கேரக்டரில் நடித்த நடிகை பரீனா மற்றும் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தி நடித்த விஜே அர்ச்சனாவும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகின்றனர் என தகவல்கள் பரவி வருகிறது.

இதுத்தவிர பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ரச்சிதாவின் கணவர் தினேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், உமா ரியாஸ், குக் வித் கோமாளி அஸ்வின் என இந்த லிஸ்டில் பலரின் பெயர்களும் வெளியாகியுள்ளன. அதே போல் இந்த முறை பிக் பாஸ் 7ல் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் இருப்பதாவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் பிரபலமாகலாம் என பெரிய கனவுகளோடு தான் போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலரால் மட்டுமே போட்டியின் இறுதிவரை மகிழ்ச்சியாக நன்றாக விளையாட முடிகிறது. இது வெறும் தகவல்களே தவிர பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகும் உறுதியான போட்டியாளர்களின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.