விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கோபிநாத். 1975 ஆம் ஆண்டு புதுக்கோட்டை அறந்தாங்கியில் பிறந்து, பின்பு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக சென்னைக்கு சென்றார். ஊடகத்துறைக்கு வருவதற்கு முன் சென்னையில் தெருக்களில் மார்க்கெட்டிங் வேலைகளை செய்துள்ளார்.
இதனை அடுத்து யுனைடெட் தொலைக்காட்சியில் தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார் கோபிநாத். பின்னர் 1997 முதல் ராஜ் நெட்வொர்க், ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தார். அதற்கு பின் விஜய் டிவியில் சேர்ந்து மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, 2006 ஆம் ஆண்டு முதல் நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணி செய்ய தொடங்கினார் கோபிநாத். இந்த நிகழ்ச்சி மூலம் கோபிநாத் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கோபிநாத் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி 2016ல் நீயா நானா நிகழ்ச்சியில் வயதான நபர் தன்னுடைய பேத்தியின் படிப்பு கட்டணம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதை கண்ணீரோடு பேசி இருந்தார் முதியவர் ஒருவர். அவரது பேத்தியை எப்படியோ கஷ்டப்பட்டு பத்தாயிரம் ரூபாய் கட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் மீதம் 26,000 பேலன்ஸ் இருப்பதாகவும் அதை கட்ட வேண்டும் என்றும் பேசி இருந்தார்.
மேலும் அவரின் ஏழ்மை நிலை மற்றும் பேத்தியை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஏக்கத்தை பார்த்து அனைவரும் கண்கலங்கிவிட்டனர். அப்போது நீங்க கவலைப்படாதீங்க உங்க பேத்தி படிப்புக்கு தேவையான மொத்த பணத்தையும் நான் கொடுத்து உதவுகிறேன் என கோபிநாத் கூறியிருந்தார். இதைப்பற்றி அந்த தாத்தாவின் பேத்தி தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நான் நீயா நானா நிகழ்ச்சியில் என் தாத்தாவுடன் கலந்து கொண்டபோது என் தாத்தா எனக்கு பீஸ் கட்ட பணமில்லை என்று சொன்னபோது மீதமுள்ள தொகையை கட்டி நான் படிக்க வைக்கிறேன்னு கோபிநாத் சொல்லி இருந்தார். ஆனால் நிகழ்ச்சியில் பேசியது போல நிஜத்தில் தனக்கு எந்த உதவியும் கோபிநாத் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சி முடிந்தவுடன் கோபிநாத் அவருடைய பிஏ நம்பர் எங்களிடம் கொடுத்தார். நாங்கள் ஒரு வாரமாக கோபிநாத் அவர்களின் பிஏவிற்கு போன் செய்தோம். ஆனால், அவர்கள் முதல் இரண்டு மூன்று நாட்கள் ஃபோனை எடுக்கவே இல்லை. பிறகு கோபிநாத் சார் பிசியாக இருக்கிறார் ஃபிரி ஆன பின் அவரே உங்களை கூப்பிடுவார் என்று சொல்லி விட்டார்கள். நானும் அவர்களே கூப்பிடுவார்கள் உதவி செய்ய வந்தவர்களை அடிக்கடி போன் போட்டு தொல்லை செய்ய கூடாது என்று காத்துக் கொண்டிருந்தேன்.
பின் பல மாதங்கள் சென்றும் அவர்கள் எங்களை கூப்பிடவே இல்லை. எனக்கும் இனி அவருக்கு போன் பண்ண வேண்டாம் என்று தோன்றி விட்டது. நான் இப்போது என் படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். வேலை கிடைத்ததும் என்னோட தாத்தாவை நான் நல்லா பார்த்துக்குவேன். அவர் எனக்கு உதவாதது பற்றி கவலை இல்லை.
ஆனால் ஒருவருக்கு உதவுகிறேன் என உறுதி கொடுத்துவிட்டு சொன்னதை செய்யாமல் இப்படி ஏமாற்றக்கூடாது என்று வருத்தத்துடன் அந்த பெண் பேசியிருக்கும் வீடியோ வெளியானதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். பல பேருக்கு பல அட்வைஸ் செய்துவரும் கோபிநாத்தா இப்படி கேமரா முன்பு ஒன்று பேசி விட்டு அதனை செய்யாமல் அலட்சியம் செய்யலாமா? அவரால் உதவி செய்யமுடியவில்லை என்றால் எதற்கு கேமரா முன்பு நின்று கொண்டு தன்னை பெரிய கொடை வள்ளல் போன்று காட்டி கொள்ள வேண்டும் என கடும் எதிப்பு கோபிநாத்துக்கு எதிராக வலுத்து வருவது குறிப்பிடதக்கது.