டிடி என்கிற திவ்ய தர்ஷினி விஜய் டிவியில் சிறுவயதில் இருந்தே Anchor ஆக பணியாற்றி பிரபலமானார். இவர் தொகுத்து வழங்கிய பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் சக்கைப்போடு போட்டாலும், அவருக்கென ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் அவர் நேர்காணல் செய்யாத பிரபலங்களே இல்லை என சொல்லலாம்.
அந்த அளவுக்கு எக்கச்சக்கமான பிரபலங்களை இண்டர்வியூ எடுத்துள்ளார். இதன் காரணமாக விஜய் டிவியின் அடையாளமாகவே மாறினார் திவ்யதர்ஷினி. இந்தச் சூழலில் அவர் விஜய் டிவியிலிருந்து விலகிவிட்டதாக சமீபத்தில் தெரிவித்தார். ஏனெனில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு நெடுநேரம் நிற்க முடியாத நிலை ஏற்பட்டதால் விஜய் டிவியை விட்டே விலகினார்.
ஆனால் அவ்வப்போது இசை வெளியீட்டு விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் டிடி-க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், டிடியை காதலிப்பதாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாகவும் ஒரு பிரபலம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் ஆனது. ஸ்ரீகாந்தும், டிடி-யும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின்னர் நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை, மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு தன் கணவரை விவாகரத்து செய்து டிடி பிரிந்தார்.
இந்நிலையில் தான் டிடி-யை திருமணத்திற்கு முன்பிருந்தே நான் காதலித்தேன் என பிரபல தொகுப்பாளரும், நடிகருமான வி.ஜே ரமேஷ் நல்லாயன் கூறியதோடு, டிடி மீதான ஒன் சைடு லவ் பற்றி விஜே ரமேஷ் நல்லலாய்யன் எமோஷனலாக பேசியுள்ளார். அதில் அவர் முதன்முறையாக நான் டிடியை விஜய் டிவியில் தான் பார்த்தேன். அவரைப் பார்த்த உடனேயே எனக்குள் அவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டது.
காரணம் என்னவென்றால், அவரை எனக்கு மிக மிக பிடிக்கும். ஆனால், அப்போது டிடிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாக கூறிய அவர், நான் டிடி-யை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன். ஆனால் போகப்போக எனக்கு அவர் மீது கிரஷ் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அந்த கிரஷ் காதலாக மாறியதாகவும் கூறி உள்ளார். மேலும் அந்த காதலை டிடியிடம் சொல்ல அவரை ஜோடி செட்டில் சந்திக்க சென்ற ரமேஷுக்கு ஒரு பெரிய இடி காத்திருந்தது.
ஏனெனில் அப்போது தான் டிடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த விஷயம் தெரியவந்து, அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த சமயத்தில் நல்ல பெண்ணை மிஸ் பண்ணிட்டோமே என்று கவலையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் டிடி-க்கு திருமணம் ஆன கையோடு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து ஆன செய்தியை நான் கேட்டேன். அது என்னை மிகவும் கஷ்டப்பட வைத்தது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தான் மீண்டும் அவர் மறுமணத்திற்கு தயாராக இருக்கிறாரா என்பது குறித்து தெரிந்து கொள்ள, ஜீவா நடித்த காபி வித் காதல் படப்பிடிப்பில் டிடி இருந்தபோது, தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது டிடியிடம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி பேசும் போது, அவர் அதைப்பற்றி பேசவே தயாராக இல்லை என கூறியிருக்கிறார். இந்நிலையில் தான் டிடி கிடைக்க மாட்டார் என்ற மனவேதனையோடு டிடி மீது உள்ள காதலை பற்றி ரமேஷ் நல்லாயன் பகிர்ந்துள்ளார்