உலகமே வியக்கும் வகையில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் குறித்த மர்மம் இன்று வரை மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்தால் அரசியல் தலைவர்களின் பதவி பறிபோகும், மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்கின்ற ஒரு கருத்து தமிழக மக்களை குழப்பம் அடைய செய்து வருகிறது.
இது போன்ற கருத்துக்களை பரப்பியது யார்.? எதற்காக பரப்பினார்கள்.? மேலும் தஞ்சை பெரிய கோவிலுக்குள் உள்ளே சென்று சாதனை படைத்த, மக்கள் கேள்விப்படாத ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பே அதன் கலை நயம் மிக்க கட்டிட அமைப்பு. விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வகையில் கோவிலின் கோபுர வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கோவில் கோபுரம் மீது வைக்கப்பட்டுள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. எந்த தொழில்நுட்ப வசதியோ.? இயந்திரங்களோ.? இல்லாத காலத்தில் யானை மூலம் கொண்டு இந்த 80 டன் எடை கொண்ட கல்லை கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது என்று வரலாறு கூறுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் கல்வெட்டில் அக்கோயில் பணியாற்றிய அனைவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும், கட்டிடக்கலை நிபுணர்கள் தொடர்ந்து அங்கே வேலை செய்தவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என அனைவருடைய பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும்.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தமான தஞ்சை பெரிய கோவிலில் எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது, கோவிலில் நடந்த ஒரு விழாவுக்கு செல்லும் போது அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார், இதன் பின்பு தான் எம்ஜிஆர் உடல்நிலை குறைவால் உயிர் பிரிந்தது என்றும், மேலும் கருணாநிதி, இந்திரா காந்தி போன்றவர்கள் தஞ்சை பெரிய கோவிலால் தான் பதவியை இழந்தார்கள் என்றும்,
இதன் பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு முன் வாசல் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்றார் என்கின்ற தஞ்சை கோவிலை பற்றிய ஒரு மர்மம் மக்கள் மத்தியில் உலாவி கொண்டிருக்கும் வகையில், தஞ்சை பெரிய கோவில் உள்ளே படமாக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள் பல அபார வெற்றி பெற்றுள்ளது.
நடிகர் மாதவன்- ஜோதிகா நடிப்பில் வெளியான டும்டும் படத்தில் இடம்பெற்ற தேசிங்கு ராஜா முழு பாடல் காட்சியும் தஞ்சை பெரிய கோவிலில் எடுக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம், அங்கே இருக்கும் கல்வெட்டுகள், கோவில் உள்ளே செல்லும் நுழைவாயில், கோவிலின் முன்பு நந்தி சிலை பக்கத்தில் இருக்கும் சிவசிவ என எழுதப்பட்டிருக்கும் மண்டபம், ஆகிய இடங்கள் மிக பிரமாண்டமாக காட்டப்பட்டுள்ள இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது.
இதே போன்று நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான தவசி படத்தில் ஏலே இமயமலை பாடல் முழுவதும் தஞ்சை பெரிய கோவில் எடுக்கப்பட்டது, நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ராஜராஜ சோழன் படம் பெரும்பாலும் தஞ்சை பெரிய கோவிலில் எடுக்கப்பட்டது. நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சில காட்சிகள் தஞ்சை பெரியகோவிலில் எடுக்கப்பட்டிருக்கும். இப்படி தஞ்சை பெரிய கோவிலில் எடுக்கப்பட்டு இமாலய வெற்றி பெற்ற தமிழ் சினிமாக்கள் பல உண்டு.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் காதல் ஓவியம் என்கின்ற படத்தில் இடம்பெற்ற சங்கீத ஜாதி முல்லை பாடல் மிக பெரிய ஹிட் அடித்து இன்றளவு உலகம் முழுவதும் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் முழுக்க முழுக்க தஞ்சை பெரிய கோவிலில் நந்தி மண்டபம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி தமிழ் சினிமாவில் ஆச்சரியமூட்டு பல சாதனைகள் தஞ்சை பெரிய கோவில் உள்ளே சென்று வந்தவர்கள் நடத்தி காட்டியுள்ளார்கள். சில மதம் மாற்றும் ஆங்கிலேய விஷமிகள் தான் தஞ்சை பெரிய கோவில் உள்ளே சென்று வந்தால் ஆபத்து என்கிற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.