மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர் எங்கே ஹனிமூன் செல்கிறார்கள் தெரியுமா.? ஆச்சரியமூட்டும் அந்த இடம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவு, அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா அவரது மனைவி முதுமலரை விவாகரத்து பெற்று பிரிந்தது இப்படி, நீண்ட பல வருடங்கள் வாழ்ந்த சினிமா நட்சத்திர தம்பதியினர்கள் அவர்களுடைய திருமண பந்தத்தை முடித்துக் கொண்டு பிரிந்து சென்று கொண்டிருக்கும் செய்தி தமிழக மக்களுக்கு மிக பெரிய வருத்தத்தை கொடுத்து வருகிறது.

அதே நேரத்தில் மறுப்பக்கம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம், குக் வித் கோமாளி புகழ் திருமணம், மற்றும் VJ மகாலட்சுமி – ரவீந்திரன் திருமணம் போன்ற நட்சத்திர திருமணங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் வாழ்த்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் நட்சதிர தம்பதியினர் அனைவரும் தங்கள் திருமணம் சுமார் ஒரு வாரத்துக்காவது பரபரப்பாக பேச வேண்டும் என்கிற நோக்கில் பிரமாண்டமாக திருமணம் செய்து வருகின்றனர்.

திருமணத்துக்கு போன்று தங்கள் ஹனிமூன் அதை விட பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தனி தீவிற்கு சென்று, அங்கே தங்களுடைய தேனிலவை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தனர்.

பெரும்பாலும் நட்சத்திர தம்பதியினர் தங்களுடைய பிரைவேசி கருத்தில் கொண்டு ஹனிமூன் தனி தீவுகளை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் கோடீஸ்வரரான தயாரிப்பாளர் ரவீந்திரன் தற்பொழுது சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி யை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் எளிமையாக திருப்பதியில், குடும்பத்தினர் மற்றும் முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த திருமணம் எந்த ஒரு முன் அறிவிப்பு மற்றும் விளம்பரம் இல்லாமல் தீடிரென நடைபெற்றது. இந்நிலையில் தங்கள் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது, ஆனால் ஹனிமூன் மிக பிரமாண்டமாக மனைவி மஹாலஷ்மி இதுவரை அவர் வாழ்க்கையில் பார்த்திடாத ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்திரன்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று அங்கே உள்ள ஒரு தனி தீவில் மிகப் பிரம்மாண்டமாக புதுமண தம்பதியினர் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர் தங்களுடைய ஹனிமூனை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி. மேலும் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் போன்று தொடர்ந்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

மானம், மரியாதை போச்சு… லெஜெண்ட் சரவணன் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… என்ன பிரட்சனை தெரியுமா.?