இன்று தமிழக அரசியலிலும் சரி, தமிழ் சினிமா வட்டாரத்திலும் சரி ஹாட் டாப்பிக் காக பேசப்பட்டு வருவது இன்று திரைக்கு வந்துள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் தான், இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் படத்தில் ஜாதி இருக்கு, மதம் இருக்கு, ஆனால் ஜாதி வன்மம் இல்லை, மத மோதல் இல்லை, பாசம்,நேர்மை,காதல்,குடும்பம்,சமூக சிந்தனை இது தான் ருத்ரதாண்டவம் திரைப்படம் எடுத்துரைக்கிறது.
மோகன் ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரௌபதி படத்துக்கு பின் நடிகர்களுக்கும் எப்படி போட்டி இருந்து வந்ததோ அதே போன்று இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் மோகன் ஜி இருவருக்கும் இடையில் இவர்களின் படைப்புகளை வைத்து கடும் விவாதம் பொது தளங்களில் எழுந்து வருவது குறிப்பிடதக்கது. அந்த வகையில் பா.ரஞ்சித் படங்களில் ஒரு குறிப்பிட்ட சிலரை சீண்டுவது போல் குறியீடு வைத்து தனது படங்களை இயக்குவதாக விமர்சனம் எழுந்து வந்தது.
ஆனால் ருத்ரதாண்டவம் படத்தில் மறைமுகமாக குறியீடு ஏதும் இல்லாமல் நேரடியாக பொலந்து காட்டியுள்ளார் அந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி, மத போதகர் மோகன் சி லாரன்ஸ் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி மதம் பிரச்சரத்தில் ஈடுபட்டார் என்பதை நடிகர் மனோ பாலா மூலம் திரையில் காட்டியவர், அதே போன்று கிருஸ்துவராக அந்த படத்தில் நடித்த தம்பி ராமையவின் கதாபாத்திரம் கிருஸ்துவர்கள் ஒரு சிலர் மட்டுமே தவறு செய்கின்றனர் அது பல நல்ல கிறிஸ்துவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் படத்தில் பட்டியல் சாதியினரை போதை பொருள் கடத்தல் செய்வதாக ருத்ரதாண்டவம் திரைப்படம் சித்தரித்துள்ளதாக ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர், ஆனால் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு போதை பொருளுக்கு அடிமையான அந்த படத்தில் மாறன் என்கிற கதாபாத்திரம் இறந்து விடுகிறார், அவருடன் இணைந்து போதை பொருள் விற்பனை செய்யும் அவருடைய நண்பரும் மாறனன் இருவரும் வேறு வேறு சாதி என்பதை நீதிமன்ற காட்சிகள் வெளிப்படுத்துவது, ஒரே சாதியை இயக்குனர் மோகன் ஜி குறிவைத்து தாக்குகிறார் என்கிற விமர்சனம் தவிடுபொடியாக்கி உள்ளது.
படத்தில் PCR சட்டம் தவறாக பயன்படுத்த படுவது, மதம் மாற்றம் செய்யப்படுவது பின்னணியில் உள்ள அரசியல், ஒரு இளைஞன் மரணத்தின் உள்ள அரசியல், போன்ற காட்சிகள் இதில் தொடர்புடைய அனைவருக்கும் உறுத்தலாக இருக்கும், அதே வேலையில் அடுத்த தலைமுறையினர் போதை பொருளுக்கு அடிமையாகாமல் காக்க என்ன செய்ய வேண்டும் என சிந்திப்பவர்களுக்கு இந்த படம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.